Nokia G20 | ரூ.13,000 விலையில் 48 MP கேமராவுடன் புதிய நோக்கியா போன் அறிமுகமாகியிருக்கு!

6 July 2021, 1:53 pm
Nokia G20 launched in India at Rs. 13,000
Quick Share

HMD குளோபல் தனது சமீபத்திய பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போனான நோக்கியா G20 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,999 விலையில் ஜூலை 7 முதல் அமேசான் மற்றும் நோக்கியாவின் இ-ஸ்டோர் வழியாக முன்பதிவுச் செய்ய கிடைக்கும்.

இதன் முக்கிய சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இந்த சாதனம் HD+ டிஸ்பிளே, குவாட் ரியர் கேமராக்கள், மீடியா டெக் ஹீலியோ G35 சிப்செட் மற்றும் 5,050 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

நோக்கியா G20 ஒரு தடிமனான கீழ்பக்க பெசல் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவற்றுடன் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், இது வட்ட வடிவிலான குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.5 அங்குல HD+ (720×1600 பிக்சல்கள்) LCD திரையை 20:9 என்ற விகிதத்துடன் கொண்டுள்ளது. இது இரண்டு வண்ண வகைகளில் கிடைக்கும்.

பரிமாணங்களைப் பொறுத்தவரை, இந்த சாதனம் 164.9x76x9.2 மிமீ அளவுகளையும் மற்றும் 197 கிராம் எடையையும் கொண்டிருக்கும்.

நோக்கியா G20 ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பில் 48 MP முதன்மை சென்சார், 5 MP அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 MP மேக்ரோ ஸ்னாப்பர் மற்றும் 2 MP ஆழ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புக்கு, 8MP முன்பக்க கேமரா உள்ளது.

நோக்கியா G20 மீடியா டெக் ஹீலியோ G35 செயலி உடன் இயங்குகிறது, இது 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது (512 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது).

இது ஆண்ட்ராய்டு 11 OS இல் இயங்குகிறது மற்றும் 5,050 mAh பேட்டரியை பேக் செய்கிறது, இது மூன்று நாட்கள் வரை நீடிக்கும் திறன் கொண்டது.

இணைப்பிற்காக, சாதனம் வைஃபை, புளூடூத் 5.0, GPS, ஹெட்போன் ஜேக் மற்றும் டைப்-C போர்ட் ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்குகிறது.

நோக்கியா G20 விலை 4 ஜிபி / 64 ஜிபி அடிப்படை மாடலுக்கு 12,999 ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது. 4 ஜிபி / 128 ஜிபி வேரியண்டின் விலை விவரங்கள் ஜூலை 7 ஆம் தேதி வெளியாகும். ஜூலை 7 முதல் இதற்கான முன்பதிவு தொடங்கும். இது அமேசான் மற்றும் நோக்கியாவின் அதிகாரப்பூர்வ e-store வழியாக வாங்க கிடைக்கும்.

Views: - 106

0

0