நோக்கியா G20, G10 வெளியீடு | முழு விவரங்களும் உங்களுக்காக இங்கே

9 April 2021, 4:54 pm
Nokia G20, G10 announced
Quick Share

நோக்கியாவின் புதிய X, G மற்றும் C தொடர் ஸ்மார்ட்போன்கள் இறுதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, இதில் நோக்கியா X20, நோக்கியா X10, நோக்கியா G20, நோக்கியா G10, நோக்கியா C20 மற்றும் இறுதியாக நோக்கியா C10 ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடங்கும். X சீரிஸ் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது, G-சீரிஸ் மீடியாடெக் சிப்செட் உடன் இயங்குகிறது.

நோக்கியா G20 உலகளவில் மே மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மிட்நைட் சன் மற்றும் நார்டிக் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும் மற்றும் 4/64 ஜிபி மற்றும் 4/128 ஜிபி உள்ளமைவுகளில் வருகிறது. 

நோக்கியா G10 உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ஏப்ரல் பிற்பகுதியில் நைட் மற்றும் டஸ்க் வண்ண விருப்பங்களில் கிடைக்கும் மற்றும் 3/32 ஜிபி மற்றும் 4/64 ஜிபி உள்ளமைவுகளில் கிடைக்கும்.

நோக்கியா G20, நோக்கியா G10 விவரக்குறிப்புகள்

 • நோக்கியா G20 மற்றும் G10 ஸ்மார்ட்போன்கள் 6.5 அங்குல V-நாட்ச் டிஸ்ப்ளேவை HD+ (720 x 1,600 பிக்சல்கள்) ரெசல்யூஷன், மற்றும் 20:9 திரை விகிதத்துடன் கொண்டுள்ளது. 
 • நோக்கியா G20 ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G35 SoC உடன் இயக்கப்படுகிறது, நோக்கியா G10 ஹீலியோ G25 SoC உடன் இயக்கப்படுகிறது. 
 • நோக்கியா G20 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை இன்டெர்னல்  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மேலும் இது 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது. 
 • நோக்கியா G10 3 ஜிபி அல்லது 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அல்லது 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் ஸ்டோரேஜும் விரிவாக்கக்கூடியது.
 • இரண்டு தொலைபேசிகளிலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது. 
 • கேமராவைப் பொறுத்தவரை, நோக்கியா G20 ஒரு குவாட்-ரியர் கேமரா அமைப்புடன் 48 MP முதன்மை சென்சார், 5 MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 MP ஆழம் சென்சார் மற்றும் 2 MP மேக்ரோ ஷூட்டருடன் வருகிறது. 
 • முன்பக்கத்தில், நிலையான ஃபோகஸ் கொண்ட 8 MP செல்பி கேமரா சென்சார் உள்ளது.
 • நோக்கியா G10 ஒரு மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 13 MP முதன்மை கேமரா, மேக்ரோ மற்றும் டெப்த் காட்சிகளுக்கு இரண்டு 2 MP சென்சார்கள் உள்ளது. 
 • முன்பக்கத்தில், G20 போன்று செல்ஃபிக்களுக்கென அதே 8 MP சென்சார் உள்ளது.
 • நோக்கியா G10 மற்றும் G20 ஆகியவை 5050 mAh பேட்டரியை 10W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 11 உடன் 2 வருட உத்தரவாத புதுப்பிப்புகளுடன் இயங்குகின்றன. 
 • இணைப்பு விருப்பங்களில் 4ஜி, வைஃபை, சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி-C போர்ட், 3.5 மிமீ ஹெட்போன் ஜேக், புளூடூத் 5.0 ஆகியவை அடங்கும். 
 • கூடுதல் அம்சங்களில், கூகிள் அசிஸ்டன்ட் Key மற்றும் இரு தொலைபேசிகளுக்கும் IPX2 மதிப்பீடு ஆகியவை அடங்கும்.

Views: - 99

0

0