நோக்கியா நோக்கியா X20, X10 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் | அம்சங்கள் & விவரங்கள் இதோ

9 April 2021, 4:50 pm
Nokia launches Nokia X20, X10
Quick Share

நோக்கியாவின் புதிய X, G மற்றும் C தொடர் ஸ்மார்ட்போன்கள் இறுதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, இதில் நோக்கியா X20, நோக்கியா X10, நோக்கியா G20, நோக்கியா G10, நோக்கியா C20 மற்றும் இறுதியாக நோக்கியா C10 ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடங்கும். X சீரிஸ் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது, G-சீரிஸ் மீடியாடெக் சிப்செட் உடன் இயங்குகிறது.

நோக்கியா X20 உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மே மாதம் முதல் மிட்நைட் சன் மற்றும் நோர்டிக் ப்ளூ கலர் விருப்பங்களில் கிடைக்கும் மற்றும் 6/128 ஜிபி மற்றும் 8/128 ஜிபி உள்ளமைவுகளில் கிடைக்கும். 

நோக்கியா X10 உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ஜூன் முதல் ஃபாரஸ்ட் மற்றும் ஸ்னோ வண்ண விருப்பங்களில் கிடைக்கும் மற்றும் 6/64 ஜிபி, 6/128 ஜிபி மற்றும் 4/128 ஜிபி உள்ளமைவுகளில் கிடைக்கும்.

நோக்கியா X20, நோக்கியா X10 விவரக்குறிப்புகள்

  • நோக்கியா X20 மற்றும் X10 ஆகியவை 6.67 இன்ச் டிஸ்ப்ளேவுடன் முழு HD+ (1,080×2,400 பிக்சல்கள்) ரெசல்யூஷன், 450 நைட்ஸ் பிரகாசம், 20:9 திரை விகிதம் மற்றும் ஃப்ளிக்கர்-ஃப்ரீ டிம்மிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 
  • இரண்டுமே ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 SoC சிப்செட் உடன் இயக்கப்படுகின்றன. 
  • நோக்கியா X20 மாடலில் 8 ஜிபி ரேம் மற்றும் நோக்கியா X10 மாடலில் 6 ஜிபி வரை RAM உடன் இரண்டிலும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விருப்பங்கள் இருக்கும்.
  • மைக்ரோ SD கார்டைப் பயன்படுத்தி 512 ஜிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்கலாம். இரண்டு மாடலிலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கும். 
  • கேமராவைப் பொறுத்தவரை, நோக்கியா X20 Zeiss ஆப்டிக்ஸ் அடிப்படையிலான குவாட்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 
  • இதில் ஆட்டோ ஃபோகஸ் உடன் 64 MP முதன்மை சென்சார், 5 mp அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 MP ஆழம் சென்சார் மற்றும் 2 MP மேக்ரோ ஷூட்டர் ஆகியவை இருக்கும். முன்பக்கத்தில், நிலையான ஃபோகஸ் கொண்ட 32 MP செல்பி கேமரா சென்சார் இருக்கும்.
  • நோக்கியா X10 Zeiss optics உடன் ஒரே மாதிரியான சென்சார்களைக் கொண்டுள்ளது. ஆனால் 64 MP பிரதான சென்சாருக்குப் பதிலாக 48 MP சென்சார் கொண்டிருக்கும். இது செல்ஃபிக்களுக்கான 8MP சென்சாரையும் கொண்டுள்ளது.
  • நோக்கியா X10 மற்றும் X20 ஆகியவை 4470 mAh பேட்டரியை 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 11 இல் 3 வருட உத்தரவாத புதுப்பிப்புகளுடன் இயங்குகின்றன. 
  • இணைப்பு விருப்பங்களில் 5ஜி, 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, NFC, 3.5 மிமீ ஹெட்போன் ஜேக், சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி-C போர்ட், புளூடூத் 5.0 ஆகியவை அடங்கும். 
  • கூடுதல் அம்சங்களில் நோக்கியா X10 க்கான OZO ஆடியோ, கூகிள் அசிஸ்டென்ட் கீ மற்றும் IP 52 மதிப்பீடு ஆகியவை அடங்கும்.

Views: - 109

0

0