Nothing Ear (1) TWS இயர்பட்ஸ் விரைவில் | இந்த தேதியை மறக்காம நோட் பண்ணிடுங்க!

Author: Dhivagar
30 June 2021, 12:01 pm
Nothing Ear (1) TWS To Launch On July 27 In India: What To Expect?
Quick Share

Nothing Ear (1) TWS இயர்பட்ஸை அதன் முதல் தயாரிப்பாக வெளியிட இருப்பதாக நத்திங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் பெய் சமீபத்தில் உறுதிப்படுத்தினார். இப்போது, இந்த இயர்பட்ஸ் ​​ஜூலை 27 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, மேலும் நிறுவனம் வெளியிட்ட அறிமுக அழைப்பிதழ் மூலம் என்னென்ன மாதிரியான அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதற்கான குறிப்பு நமக்கு கிடைக்கிறது.

இந்த பிராண்ட் தனது வலைத்தளத்தையும் புதுப்பித்துள்ளது, இது இப்போது வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இரண்டு தலை போன்ற வடிவமைப்பைக் காட்டுகின்றது. இதன் மூலம் தயாரிப்பு இரண்டு வண்ணங்களில் வரக்கூடும் என்பதைப் புரிந்துக்கொள்ள முடிகிறது. 

அதோடு, Nothing Ear (1) TWS இயர்பட்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் டூயல்-டோன் பினிஷ் உடனும் வரக்கூடும். இந்த பிராண்ட் அறிமுகம் செய்யும் வெளிப்படையான பதிப்பு (transparent edition) ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியாகும். இதனுடன் வழக்கமான மாடல் ஒன்றும் இருக்கும், இது குறைந்த விலையில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அழைப்பிதலின் மூலம் வெளியான தகவலின் படி, Nothing Ear (1) TWS இயர்பட்ஸ் லண்டனில் வெளியாகும், மேலும் இதன் வெளியீட்டு நிகழ்வு சமூக ஊடக தளங்களிலும் யூடியூபிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். 

இந்த TWS இயர்பட்ஸ் புளூடூத் 5.0 அல்லது புதிய பதிப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும், மேலும் உயர்-தெளிவுத்திறன் கொண்ட ஆடியோ டிரான்ஸ்மிஷனுக்காக பல்வேறு வயர்லெஸ் கோடெக் உடன் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Nothing Ear (1) TWS இயர்பட்ஸ் Android மற்றும் iOS சாதனங்களில் நன்றாக வேலை செய்யும். அவை சார்ஜிங் பாக்ஸ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வேகமான வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கும்.

Nothing Ear (1) TWS: எதிர்பார்க்கப்படும் இந்திய விலை

Nothing Ear (1) TWS இயர்பட்ஸ் லண்டனில் அறிமுகம் செய்யப்படும் என்றாலும், இந்த தயாரிப்பு இந்தியாவிலும் முதல் நாளிலேயே விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு, Nothing Ear (1) TWS இயர்பட்ஸ்க்கு  எவ்வளவு செலவாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும், அவை ஏர்பாட்ஸ் புரோ போல ரூ.20000 முதல் ரூ.25000 வரை விலை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் உண்மையான தகவல்களை அறிமுகம் ஜூலை 27 வரை காத்திருக்க வேண்டும்.

Views: - 359

0

0