ஆன்ட்ராய்டு வாட்ஸ்அப் பயனர்களுக்கான செய்தி! வாட்ஸ்அப்பில் புது மாற்றம்

14 June 2021, 8:20 am
Now your WhatsApp Chats will be different in design
Quick Share

பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான பிரபலமான செய்தி தளமான வாட்ஸ்அப், ஆன்ட்ராய்டு போன்களுக்கான செயலியில் சில வடிவமைப்பு மாற்றங்களை கொண்டு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. WABetaInfo தகவலின்படி, வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பயன்பாட்டின் பீட்டா பதிப்பில் சில வடிவமைப்பு மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளது, மேலும் அந்த மாற்றங்கள் பயன்பாட்டின் அரட்டை பட்டியலில் (Chat List) தோன்றும் என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் அதன் அரட்டை பட்டியலில் இடையில் தோன்றும் வரி பிரிப்பான்களை (Line Separators) அகற்றுவதாக கூறப்படுகிறது.  முகப்பு பக்கத்தில் சமீபத்தில் பேசிய தொடர்புகள் மற்றும் குழுக்களின் பட்டியல் தோன்றும். அப்படி தோன்றும் பெயர்களை ஒரு சிறிய கோடு பிரிக்கும் வகையில் இருக்கும். அந்த கோடு தான் இப்போது நீக்கப்பட போவதாக கூறப்படுகிறது.

WABetaInfo தனது அறிக்கையில், இது வாட்ஸ்அப் பயன்பாட்டின் வடிவமைப்பு மாற்றம் அல்ல என்றும், பிரபலமான செய்தியிடல் தளத்திற்கான ஒரு சிறிய UI மாற்றம் மட்டுமே என்று தெரிவித்துள்ளது. 

வாட்ஸ்அப் இந்த மாற்றங்களை முதல் பீட்டா பயனர்களுக்காக கொண்டு வந்து சோதனை செய்து பிறகு இது Android இல் WhatsApp ஐப் பயன்படுத்தும் பிற பயனர்களுக்கும் செயல்படுத்தும் என்றும் WABetaInfo அறிக்கை மேலும் கூறியுள்ளது.

Views: - 201

0

0