பேஸ்புக் கனெக்ட் நிகழ்வில் ஸ்னாப்டிராகன் XR2 உடன் ஆக்குலஸ் குவெஸ்ட் 2 சாதனம் அறிமுகம் ஆனது!

17 September 2020, 6:11 pm
Oculus Quest 2 with Snapdragon XR2 Platform launched at Facebook Connect
Quick Share

இன்று நடைபெற்ற பேஸ்புக் கனெக்ட் நிகழ்வில், பேஸ்புக் அதன் ஆக்குலஸ் குவெஸ்ட் சாதனத்தின் அடுத்த பதிப்பான ஆக்குலஸ் குவெஸ்ட் 2 சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய மெய்நிகர் சாதனம் ஆன VR ஹெட்செட் இப்போது கருப்பு மற்றும் சாம்பல் வண்ண வடிவமைப்பில் வருகிறது. இந்த சாதனம் இப்போது 503 கிராம் எடையைக் கொண்டுள்ளது, இது ஆக்குலஸ் குவெஸ்ட் 1 ஐ விட 10 சதவீதம் இலகுவானது.

Oculus Quest 2 with Snapdragon XR2 Platform launched at Facebook Connect

சாதனம் ஒருங்கிணைந்த ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோஃபோனுடன் வருகிறது. இது புதிய ஸ்னாப்டிராகன் XR2 இயங்குதளத்தால் இயக்கப்படுகிறது, இது அதன் முந்தைய பாதிப்பிலிருந்து குறிப்பிடத்தக்க பல மாற்றங்களுடன் அறிமுகமாகிறது. இது குவெஸ்ட் 1 ஐ விட 11 மடங்கு அதிக AI செயலாக்க திறனைக் கொண்டுள்ளது.

ஹெட்செட்டில் உள்ள பேட்டரி உங்களுக்கு 2-3 மணி நேரம் நீடிக்கும், குவெஸ்ட் 1 இல் பெரிய பேட்டரி இருந்தது. இந்த சாதனம் 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 64 ஜிபி அல்லது 256 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட 2 வகைகளில் கிடைக்கிறது.

உட்புறத்தில், இது 72 ஹெர்ட்ஸ் 1832 × 1920 (ஒரு கண்ணுக்கு) ஃபாஸ்ட்-சுவிட்ச் எல்சிடியைக் கொண்டுள்ளது, இது அதன் முந்தைய பதிப்புகளை விட 50% அதிக பிக்சல்கள் கொண்டுள்ளது. குவெஸ்ட் 2 இன் அதிகரித்த கிராபிக்ஸ் செயலாக்க சக்தி 90 ஹெர்ட்ஸ் வரை செயல்பட அனுமதிக்கிறது. இது குவால்காமின் ஃபாஸ்ட் கனெக்ட் 6800 சிஸ்டத்துடன் வைஃபை 6 ஐ கொண்டுள்ளது, இது சிறந்த பதிவிறக்க வேகத்தை வழங்கும்.

Oculus Quest 2 with Snapdragon XR2 Platform launched at Facebook Connect

குவெஸ்ட் 2 இல் மூன்று அமைப்புகளுடன் உள்ளமைக்கப்பட்ட IPD (இன்டர்பூபில்லரி டிஸ்டன்ஸ் -interpupillary distance) சரிசெய்தல் பொறிமுறையும் உள்ளது, எனவே உங்களுக்கு ஏற்ற லென்ஸ் நிலையை நீங்கள் சரிசெய்யலாம்.

குவெஸ்ட் 2 முழு உடற்பயிற்சி பயன்பாடுகள், தனித்துவமான பொழுதுபோக்கு மற்றும் சமூக இடங்களுடன் முழு அட்டவணை பிரீமியம் மற்றும் தனித்துவமான விளையாட்டுகளையும் கொண்டிருக்கும். இதில் உள்ள கட்டுப்படுத்திகளும் அதன் முந்தைய பாதிப்புகளில் இருந்து மறுவடிவமைப்பைப் பெற்றுள்ளன.

ஹெட்செட் 64 ஜிபி வேரியண்டிற்கு $299 (தோராயமாக ரூ.22,000) மற்றும் 256 ஜிபி வேரியண்டிற்கு $399 (தோராயமாக ரூ.29,000) விலைகளைக் கொண்டுள்ளது. சாதனத்திற்கான முன்கூட்டிய ஆர்டர்கள் இன்றே நேரலையில் உள்ளன, மேலும் இந்த சாதனம் அக்டோபர் 13, 2020 அன்று அறிமுகப்படுத்தப்படும்.

Views: - 11

0

0