இன்னும் ஒரு 12 நாள் மட்டும் வெயிட் பண்ணுங்க! கோலாகலமாக வரப்போகுது ஓலா ஸ்கூட்டர்! சொன்னது யார் தெரியுமா?

Author: Dhivagar
3 August 2021, 3:40 pm
Planning a launch event for the Ola Scooter
Quick Share

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று இந்திய மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஓலா மின்சார ஸ்கூட்டர் வெளியாகும் என்று அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு ரூ.499 விலைக்குத் துவங்கி வெறும் 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை எட்டியது குறிப்பிடத்தக்கது.

ஓலா நிறுவனம் இந்தியா முழுவதும் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று தயாரிப்புகளை விநியோகம் செய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இப்படி செய்யும்போது நிறுவனத்திடம் இருந்தே நேரடியே ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்பதால், இடைநிலை டீலர்ஷிப்களின் தேவையும் அதற்காகும் செலவும் முற்றிலுமாக தவிர்க்கப்படும் என்பதால் இந்த புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.

ரூ.499 செலுத்துவதன் மூலம் ஓலா ஸ்கூட்டரை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்திருந்தால், ஓலா டெலிவரிகளை கொடுக்க தொடங்கும்போது அதைப் பெறுவதில் நீங்கள் முதன்மை வாடிக்கையாளராக இருப்பீர்கள்.

அதே போல உங்களுக்கு ஸ்கூட்டர் வேண்டாம் என்றால் எந்த நேரத்திலும் பணத்தைத் திரும்பப் பெறலாம். உங்கள் தொலைபேசி எண் மற்றும் OTP சரிபார்ப்புடன் http://olaelectric.com தளத்தில் Login செய்ய வேண்டும். உள்நுழைந்த பிறகு, நெட் பேங்கிங், கிரெடிட் / டெபிட் கார்டுகள், யுபிஐ, இ-வாலெட்டுகள் அல்லது ஓலாமனி ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்கள் ஓலா ஸ்கூட்டரை ரூ.499 க்கு முன்பதிவு செய்யலாம். நீங்கள் விரும்பினால், ஏராளமான ஸ்கூட்டர்களையும் முன்பதிவு செய்யலாம்.

எதிர்காலத்தில் உங்கள் ஆர்டரை ரத்துசெய்யவோ மாற்றவோ முடியும். முன்பதிவு கட்டணம் முழுமையாக திருப்பித் தரப்படுகிறது. ரத்து செய்யப்பட்ட 7-10 வணிக நாட்களுக்குள், உங்கள் அசல் கட்டண முறைக்கு பணம் திருப்பி அனுப்பப்படும். ஓலா ஸ்கூட்டரை வேறொருவரின் பெயருக்கும் மாற்றலாம். கோரிக்கை வைக்க, [email protected] என்ற அஞ்சல் முகவரியில் ஓலாவைத் தொடர்பு கொள்ளலாம். ஓலா ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய எந்த ஆவணமும் தேவையில்லை.

இந்த ஸ்கூட்டர் பத்து வண்ணங்களில் அறிமுகம் ஆகும் என்றும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Views: - 995

0

0