மாறுபட்ட அம்சங்களுடன் OnePlus 9 Pro Flash Silver லிமிடெட் பதிப்பு ஸ்மார்ட்போன் அறிமுகம் | விவரங்கள் இங்கே

3 June 2021, 11:10 am
OnePlus 9 Pro Flash Silver Limited Edition launched in China
Quick Share

ஹாஜிம் சோரயாமா எனும் ஜப்பானிய இல்லஸ்ட்ரேட்டர் உடன் இணைந்து ஒன்பிளஸ் புதிய ஒன்பிளஸ் 9 புரோ ஃப்ளாஷ் சில்வர் லிமிடெட் பதிப்பு ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

1,500 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும், ஒவ்வொன்றும் தனிப்பயனாக்கப்பட்ட சில்லறை பெட்டியில் சோரயாமா ரோபோ பொறிக்கப்பட்ட மொபைல் கேஸ் மற்றும் T-ஷர்ட்டுடன் வரும்.

இது சீனாவில் ஜூன் 9 முதல் CNY 5,499 (தோராயமாக ரூ.63,000) விலையில் கிடைக்கும்.

ஒன்பிளஸ் 9 புரோ ஃப்ளாஷ் சில்வர் லிமிடெட் பதிப்பு ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் அடிப்படையில் நிலையான ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலையே பிரதிபலிக்கிறது. இது மெலிதான பெசல்கள் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட பஞ்ச்-ஹோல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

கைபேசி 6.7 அங்குல QHD+ (1440×3216 பிக்சல்கள்) LTPO AMOLED திரையை 20:9 என்ற விகிதத்துடன், 120 Hz புதுப்பிப்பு வீதம், HDR 10+ ஆதரவு மற்றும் 1,300-நைட்ஸ் உச்ச பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 9 புரோ ஃப்ளாஷ் சில்வர் லிமிடெட் பதிப்பில் 48 MP (f/1.8) முதன்மை சென்சார், 50 MP (f/2.2) அல்ட்ரா-வைட் லென்ஸ், 8 MP (f/2.4) டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் 2MP (f / 2.4) ஒரே வண்ணமுடைய லென்ஸ் ஆகியவற்றை கொண்ட ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, 16MP (f / 2.4) கேமரா உள்ளது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ ஃப்ளாஷ் சில்வர் லிமிடெட் பதிப்பு ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 888 செயலி உடன் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான ஆக்ஸிஜன்OS 11 இல் இயங்குகிறது மற்றும் 4,500 mAh பேட்டரியை 65W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இணைக்கிறது.

இணைப்பிற்காக, இது வைஃபை 6, புளூடூத் 5.2, GPS, NFC மற்றும் டைப்-C போர்ட் ஆகியவற்றிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 9 புரோ ஃப்ளாஷ் சில்வர் லிமிடெட் பதிப்பின் விலை 12 ஜிபி / 256 ஜிபி பதிப்பிற்கு CNY 5,499 (சுமார் ரூ.63,000) ஆகும். இது ஜூன் 9 முதல் TMall, jd.com மற்றும் ஹுவாண்டாய் மால் வழியாக சீனாவில் வாங்குவதற்கு கிடைக்கும்.

இந்த சிறப்பு மாடல் உலக சந்தைகளிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் கிடைக்கும் விவரங்கள் இன்னும் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை.

Views: - 170

0

0

Leave a Reply