ஒன்பிளஸ் 9R 5ஜி, ஒன்பிளஸ் 9 5ஜி இன்று அமேசானில் விற்பனை: விலை விவரங்கள் இதோ

15 April 2021, 10:02 am
OnePlus 9R 5G, OnePlus 9 5G to go on sale today
Quick Share

ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9R முதலிய ஸ்மார்ட்போன்களை கொண்ட ஒன்பிளஸ் 9 தொடர் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகமானது. ஒன்பிளஸ் 9 ப்ரோ ஏற்கனவே இந்தியாவில் வாங்குவதற்கு கிடைத்தாலும், ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9R இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.

இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கி, இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமேசான் இந்தியா, Oneplus.in மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் ஆகியவற்றில் இருந்து வாங்குவதற்கு கிடைக்கும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 9 தொடரின் சிறப்பம்சங்களில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், டிஸ்ப்ளேமேட் A+ மதிப்பீட்டைக் கொண்ட லிக்குயிட் டிஸ்பிளே 2.0, வார்ப் சார்ஜ் 65T மற்றும் வார்ப் சார்ஜ் 50 வயர்லெஸ் ஆகியவை அடங்கும்.

ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9R: விலை, கிடைக்கும், வெளியீட்டு சலுகைகள்

ஒன்பிளஸ் 9 இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கும். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.49,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.54,999 ஆகவும் உள்ளது. இது அஸ்ட்ரல் பிளாக், ஆர்டிக் ஸ்கை மற்றும் வின்டர் மிஸ்ட் வண்ண வகைகளில் கிடைக்கும்.

ஒன்பிளஸ் 9R மாடலும் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளிலும் கிடைக்கும். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.39,999 ஆகவும் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.43,999 ஆகிவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கார்பன் பிளாக் மற்றும் லேக் ப்ளூ கலர் வகைகளில் கிடைக்கும்.

ஒன்பிளஸ் 9 வாங்கும்போது ரூ.3,000 வரையும், SBI வங்கி கிரெடிட் கார்டுகளுடன் வாங்கும்போது ஒன்பிளஸ் 9R மீது ரூ.2,000 வரை தள்ளுபடியும் கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளில் 10 சதவீத கேஷ்பேக்கையும் நிறுவனம் வழங்குகிறது.

ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9R வாங்கும்போது ரூ.499 விலையில் 120 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜுடன் Red Cable Care திட்டத்தையும் ஒன்பிளஸ் வழங்கும்.

Views: - 211

0

0