ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்தது! தகவல்கள் உங்களுக்காக | OnePlus Nord 2

13 July 2021, 5:59 pm
OnePlus Nord 2 Specifications leaked
Quick Share

ஒன்பிளஸ் நிறுவனத்திடமிருந்து நார்டு 2 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்று மிகவும் தீவிரமாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்து சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நார்டு 6.43 இன்ச் 90 Hz refresh rate உடன் ஒரு செம்மையான AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்பது தெரியவந்துள்ளது. 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நார்டு போனின் அடுத்த பதிப்பாக இது வெளியாகவியிருக்கிறது. 

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நார்டு 2 போனை ஜூலை 22 ஆம் தேதி ஒன்பிளஸ் பட்ஸ் புரோ TWS இயர்பட்ஸுடன் வெளியிடும். 

அதோடு, தொலைபேசியின் படங்களும் கசிந்துள்ளன, அதன் மூலம் இது பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பை மெலிதான பெசல்களுடன் கொண்டிருக்கும் என்பது தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் நார்டு 2 ஒரே ஒரு செல்பி கேமராவை மட்டுமே கொண்டிருக்கும்.

வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் ஒரு அலர்ட் ஸ்லைடர் மற்றும் இடதுபுறத்தில் வால்யூம் ராக்கர் பொத்தான்களுக்கான வழக்கமான வடிவமைப்புடன் வரும். யூ.எஸ்.பி டைப்-C போர்ட்டுக்கு அடுத்ததாக ஒரு ஸ்பீக்கர் கட்அவுட் இருக்கும். 

ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி போன் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் ஜூலை 22 ஆம் தேதி ஒன்பிளஸ் பட்ஸ் புரோவுடன் வெளியிடப்படும். 

Views: - 156

0

0