தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் | எப்படி வாங்கலாம்? எங்கு வாங்கலாம்?

11 September 2020, 9:59 pm
OnePlus smartphones, smart TVs available at discounted prices
Quick Share

பண்டிகை காலம் என்றாலே நுகர்வோருக்கு, புதிய ஸ்மார்ட்போன் வாங்க அல்லது புதிய ஸ்மார்ட் டிவி வாங்க ஒரு சிறந்த நேரம். இந்த ஆண்டில் தீபாவளி போன்ற சில முக்கிய பண்டிகைகளுக்கு சில வாரங்கள் உள்ள நிலையில், சலுகைகள் மற்றும் தள்ளுபடியை வழங்கும் முதல் பிராண்டுகளில் ஒன்பிளஸ் ஒன்றாகும். நிறுவனம் தனது அனைத்து தயாரிப்புகளுக்கும் தள்ளுபடியை வழங்குகிறது.

ஒன்பிளஸ் தயாரிப்புகள் சலுகைகளுடன் கிடைக்கின்றன, ஒன்பிளஸ் 7T, ஒன்பிளஸ் 7T புரோ, ஒன்பிளஸ் 8 ப்ரோ, மற்றும் ஒன்பிளஸ் Q1 மற்றும் Q1 ப்ரோ ஸ்மார்ட் டிவிகள் போன்றவை சலுகைகளுடன் கிடைக்கின்றன. சமீபத்திய ஒன்பிளஸ் நோர்டும் புதிய ஒன்பிளஸ் விற்பனையின் ஒரு பகுதியாகும்.

ஒன்பிளஸ் X நாட்களை நினைவூட்டும் ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, 48 மெகாபிக்சல் சோனி IMX 586 குவாட்-ரியர் கேமராக்கள், குவால்காம் ஸ்னாப்டிராகன் 765G செயலி மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,115 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் ரூ.24,999 ஆரம்ப விலைக்கு கிடைக்கிறது.

ஐசிஐசிஐ வங்கியுடன் கூட்டு சேர்ந்து நடக்கும் ஒன்பிளஸ் விற்பனை செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 9 வரை செல்லுபடியாகும். ரூ.1,000 முதல், ரூ.8,000 வரை தள்ளுபடி இருக்கும்.

கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் இரண்டிலும் EMI பரிவர்த்தனைகளுக்கு உடனடி தள்ளுபடி கிடைக்கும். டெபிட் கார்டு பரிவர்த்தனைகளில் எந்த தள்ளுபடியும் இருக்காது.

அனைத்து தயாரிப்புகளிலும் மூன்று மாதங்கள் மற்றும் ஆறு மாதங்களுக்கு (ஒன்பிளஸ் நோர்டில் தவிர) வட்டி இல்லாத கிரெடிட் கார்டு EMI வசதி கிடைக்கும். அனைத்து சலுகைகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் கடைகள், ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் இந்தியா ஆகியவற்றில் பெறலாம்.

குறைந்தபட்சம் ரூ.10,999 விலையிலான பரிவர்த்தனைகள் மற்றும் பைன் லேப்ஸ் மற்றும் இன்னோவிட்டி EDC இயந்திரங்களில் சலுகைகள்  பொருந்தும்.

Views: - 6

0

0