சில தினங்களில் புதிய ஒன்பிளஸ் டிவி U1S இந்தியாவில் அறிமுகமாகிறது | விவரங்கள் இங்கே

5 June 2021, 4:12 pm
OnePlus TV U1S teased ahead of launch on June 10 in India
Quick Share

புதிய ஒன்பிளஸ் டிவி இப்போது பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதோடு இந்த டிவி குறித்த முழு விவரக்குறிப்புகளும் வெளியாகியுள்ளது, இது 4K தெளிவுத்திறன் ஆதரவுடன் மூன்று திரை அளவு, டால்பி ஆடியோ மற்றும் டால்பி அட்மோஸ் ஆகியவற்றின் ஆதரவுடன் 30W ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 10 TV, ஒன்பிளஸின் தனியுரிம ஆக்ஸிஜன் ப்ளே உள்ளடக்க கண்டுபிடிப்பு தளம் மற்றும் போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்த புதிய ஒன்பிளஸ் டிவி 2021 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி OnePlus Summer Launch நிகழ்வின் போது அறிமுகம் செய்யப்படும். இந்த ஒன்பிளஸ் டிவி U1S தொடரை ஒன்பிளஸ் நோர்ட் CE 5ஜி ஸ்மார்ட்போன் உடன் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்போது அறிமுகத்திற்கு முன்னதாக, ஒன்பிளஸ் டிவி U1S இன் சில அம்சங்கள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள டீஸரைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் டிவி U1S துல்லியமான ஹேண்ட்ஸ் ஃப்ரீ குரல் கட்டுப்பாட்டுடன் வரும். டீஸர் படம் மைக்ரோஃபோன் மற்றும் நான்கு LED விளக்குகளைக் காட்டுகிறது, இது ஒரு பயனர் கட்டளையிடும்போது ஒளிரும்.

நிறுவனம் அறிவித்துள்ள மற்றொரு அம்சம், டிவியின் தடையற்ற இணைப்பு வசதி தான். இது மக்கள் தங்கள் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுடன் Connect பயன்பாட்டின் மூலம் இணைக்க அனுமதிக்கும். இந்த டிவி வெளியாவதற்கு முன்னதாக மேலும் பல விவரங்கள் ஆன்லைனில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய U சீரிஸ் டிவிக்கள் அதன் சிறந்த டிஸ்பிளே, வடிவமைப்பு மற்றும் இந்தியாவில் வெவ்வேறு திரை அளவுகள் மற்றும் விலை பிரிவுகளில் பிரீமியம் தயாரிப்பு அனுபவத்தை வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய கசிவுகளின்படி, ஒன்பிளஸ் புதிய தொடரை 50 அங்குல, 55 அங்குல மற்றும் 65 அங்குலங்கள் ஆகிய மூன்று திரை அளவுகளில் அறிமுகம் செய்யும். இந்த மூன்று மாடல்களும் LED-பேக்லிட் LCD பேனலில் 3840 x 2160 பிக்சல்கள் (4K), HDR 10 +, HLG மற்றும் MEMC 60 Hz புதுப்பிப்பு வீதம் வரை ரெசல்யூஷன் கொண்டதாக இருக்கும்.

டிவியின் மென்பொருள் அமசத்தை பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 OS உடன் ஸ்மார்ட் வாய்ஸ் கண்ட்ரோலுடன் கூகிள் அசிஸ்டன்ட் ஆதரவையும் கொண்டிருக்கும்.

ஒன்பிளஸ் U1S LED டிவி தொடரில் டால்பி ஆடியோவுடன் Dynaudio இணைந்து 30W ஸ்பீக்கர்கள் இடம்பெறும். மேலும், வெளிப்புற சாதனங்களை இணைக்க HDMI 2.0 போர்ட்கள் இருக்கும்.

Views: - 147

0

0