ஹெல்மெட் விற்பனைக்கு 2021 ஜூன் 1 முதல் இந்தியாவில் புதிய கட்டுப்பாடு | முழு விவரம் இங்கே

28 November 2020, 8:26 pm
Only BIS-Certified Helmets With ISI Mark To Be Sold In India
Quick Share

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2021 ஜூன் 1 முதல், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் அனைத்து இரு சக்கர வாகன ஹெல்மட்களுக்கும் ‘ISI’ குறியீடு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Only BIS-Certified Helmets With ISI Mark To Be Sold In India

‘இருசக்கர வாகன மோட்டார் வாகனங்கள் (தரக் கட்டுப்பாடு) உத்தரவு, 2020’ இன் படி, இரு சக்கர வாகனங்களுக்கான அனைத்து ஹெல்மட்களையும் இந்தியாவில் சட்டப்பூர்வமாக விற்க BIS (இந்திய தர நிர்ணய பணியகம்) சான்றிதழைப் பெற வேண்டும். நாட்டில் குறைந்த தரம் வாய்ந்த இரு சக்கர வாகன ஹெல்மட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த உத்தரவு வந்துள்ளது, மேலும் சாலை விபத்துக்கள் ஏதும் ஏற்பட்டால் பாதுகாப்பை மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Only BIS-Certified Helmets With ISI Mark To Be Sold In India

ஹெல்மட்டின் எடை 1.2 கிலோகிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2018 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு விதி ஆகும். இருப்பினும், இறக்குமதி செய்யப்படும் ஹெல்மெட் விற்பனையை தடைசெய்த பின்னர் எடை விவரக்குறிப்பும் நிறுத்தப்பட்டது, அவை எடை வரம்பை மீறியும் ISI முத்திரை இல்லாமலும்  இருந்தது.

Only BIS-Certified Helmets With ISI Mark To Be Sold In India

இருப்பினும், இப்போது திருத்தப்பட்ட விவரக்குறிப்புகளுடன், இது இந்திய தரத்திற்கு இணங்கினால், இந்திய சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட ஹெல்மெட்களும் விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது,. இறக்குமதி செய்யப்பட்ட பெரும்பாலான தலைக்கவசங்களும்  DOT மற்றும் ECE போன்ற சர்வதேச தரங்களுடன் இணங்குகிறது; இந்திய சாலைகளிலும் இதைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

Views: - 83

0

0