ஹேப்பி நியூஸ் மக்களே! பெட்ரோல், டீசல் விலை குறையப்போகுதாம்!

20 July 2021, 10:39 am
OPEC, Allies Agree to Boost Oil Output as Demand Roars Back
Quick Share

கடந்த ஆண்டு கோவிட்-19 தொற்று காரணமாக எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் (OPEC) கச்சா எண்ணெய் உற்பத்தியை 10 மில்லியன் பேரல்களாக குறைத்தது.

அதையடுத்து பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை அதிகரித்ததால், பெட்ரோலிய பொருட்களின் விலைகள் மடமடவென உயர்ந்து எதிர்பார்க்காத அளவில் புதிய உச்சத்தை எட்டியது. 

இந்த தேவை அதிகரிப்பின் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என அனைத்தின் விலையுமே கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களை தீயாய் வாட்டி வதைத்தது.

100 ரூபாயையும் தாண்டிய பெட்ரோல் விலையால் பொதுமக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் சொல்லுறா துன்பத்துக்கு ஆளாகினர்.

டீசல் விலை உயர்வால் சரக்கு வாகன போக்குவரத்துக்கு ஆகும் செலவு அதிகம் ஆனதால் காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எக்கச்சக்கமாக உயர்ந்தது.

இதனால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர்.

இந்நிலைமையறிந்த எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள், தேவையைச் சமாளிக்க உற்பத்தியை அதிகரிக்க முடிவுச் செய்துள்ளன.

இப்போது இந்த OPEC நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை, ஆகஸ்ட் முதல் மேலும் 2 மில்லியன் பேரல்கள் அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளதால், பெட்ரோல் டீசல் விலை ஆகஸ்ட் மாதம் முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 134

0

0

Leave a Reply