சத்தமே இல்லாமல் ரூ.2500 விலை குறைந்தது இந்த ஓப்போ ஸ்மார்ட்போன்! இதை வாங்கலாமா?

1 May 2021, 9:40 am
Oppo A53 Gets Price Cut Of Rs. 2,500
Quick Share

ஓப்போ A53 போனின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. இப்போது, ​​91Mobiles தளத்தில் வெளியான அறிக்கையின்படி, இந்த பட்ஜெட் கைபேசியின் விலை ரூ.2,500 குறைந்துள்ளது. இருப்பினும், ஆஃப்லைன் சில்லறை கடைகளுக்கு மட்டுமே இந்த விலை குறைப்பு பொருந்தும் என்று கூறப்படுகிறது, ஏனெனில் தொலைபேசி தற்போது இ-காமர்ஸ் தளங்களில் இன்னும் அசல் விலையுடன் தான் இந்த ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ளது.

நினைவுகூர, ஓப்போ A53 இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் அடிப்படை 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.12,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,490 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இப்போது விலை குறைப்புக்குப் பிறகு, ​​ஓப்போ A53 இன் அடிப்படை மாடலின் விலை ரூ.10,990 ஆகவும் மற்றும் உயர்நிலை மாடலின் விலை ரூ.12,990 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓப்போ A53 எலக்ட்ரிக் பிளாக், ஃபேரி வைட் மற்றும் ஃபேன்ஸி ப்ளூ கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.

ஓப்போ A53: அம்சங்கள்

ஓப்போ A53 இன் முக்கிய சிறப்பம்சம் அதன் 90 Hz டிஸ்ப்ளே ஆகும். தவிர, தொலைபேசியில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே 720 x 1,600 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 20:9 திரை விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் அதன் சக்தியை ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 SoC இலிருந்து 6 ஜிபி RAM உடன் பெறுகிறது. இது 128 ஜிபி இயல்புநிலை சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது, இது கூடுதல் சேமிப்பு விரிவாக்கத்திற்கு மைக்ரோ SD கார்டு ஸ்லாட்டையும் ஆதரிக்கிறது.

மேலும், இது ஆண்ட்ராய்டு 10 இல் கலர் OS 7.2 உடன் இயங்குகிறது மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியில் இருந்து ஆற்றல் பெறுகிறது. 13MP முதன்மை சென்சார், 2MP ஆழம் சென்சார் மற்றும் மற்றொரு 2MP மேக்ரோ சென்சார் ஆகியவற்றின் கலவையுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், கைபேசி செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களுக்கு எஃப் / 2.0 லென்ஸுடன் 16 MP கேமராவைக் கொண்டுள்ளது.

மேலும், தொலைபேசி 4ஜி VoLTE, வைஃபை, புளூடூத், GPS / A-GPS, யூ.எஸ்.பி டைப்-C மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை ஆதரிக்கிறது. கடைசியாக, இது பாதுகாப்புக்காக பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரையும் கொண்டுள்ளது.

ஓப்போ A53: வாங்கலாமா?

ஓப்போ A53 நிச்சயமாக இந்த விலை பிரிவில் அனைத்து பயனுள்ள அம்சங்களுடனும் கூடிய ஒரு நல்ல ஸ்மார்ட்போனாக இருக்கும். இருப்பினும், இது 5ஜி இணைப்பைக் கொண்டிருக்கவில்லை, இது கைபேசியின் சிறிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஓப்போ பிராண்ட் சமீபத்தில் Oppo A53s என்ற பெயரில் மற்றொரு பட்ஜெட் கைபேசியை ரூ.14,990 விலையில் அறிமுக செய்துள்ளது; இது 5 ஜி இணைப்பை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 163

0

0

Leave a Reply