90 Hz டிஸ்ப்ளே, 5000 mAh பேட்டரி உடன் ஓப்போ A54 5ஜி அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

4 May 2021, 1:23 pm
Oppo A54 5G launched with 90Hz display, 5000mAh battery and more
Quick Share

ஓப்போ அதன் A54 4ஜி LTE ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததை அடுத்து சற்றே மாறுபட்ட விவரக்குறிப்புகளுடன் ஓப்போ A54 5ஜி ஸ்மார்ட்போனை ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக நான்கு-கேமரா அமைப்பு, ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆகியவை இருக்கும்.

ஓப்போ A54 5ஜி போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டிற்கான விலை EUR 219 (தோராயமாக ரூ.19,500) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஊதா மற்றும் கருப்பு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. மற்ற சந்தைகளுக்கு தொலைபேசி எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

ஓப்போ A54 5G விவரக்குறிப்புகள்

ஓப்போ A54 5G ஸ்மார்ட்போன் 1080 x 2400 பிக்சல்கள் ரெசல்யூஷன், 90 Hz refresh rate, 180 Hz touch sampling rate, 90.5 சதவீதம் திரை முதல் உடல் விகிதம் மற்றும் 405 ppi பிக்சல் அடர்த்தி கொண்ட 6.51 அங்குல FHD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மைக்ரோ SD கார்டு வழியாக விரிவாக்கக்கூடிய அட்ரினோ 619 GPU, 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணையாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் உடன் இந்த தொலைபேசி இயங்குகிறது.

ஓப்போ A54 5G ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் LED ப்ளாஷ், 8 மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார், மேக்ரோ ஷாட்களுக்கான 2 மெகாபிக்சல் (f/2.4) லென்ஸ் மற்றும் (f / 2.4) 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், திரையின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள ஒரு துளை-பஞ்ச் கட்அவுட்டில் f/2.0 துளை கொண்ட 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் உள்ளது.

ஓப்போ A54 ஆனது 10W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உடன் ஆற்றல் பெறுகிறது. இது ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்OS 11 இல் இயக்குகிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5ஜி, வைஃபை 802.11 ac (2.4 + 5 GHz), புளூடூத் 5.1, GPS + GLONASS, NFC, யூ.எஸ்.பி டைப்-C ஆகிய அம்சங்கள் உள்ளன.

Views: - 104

0

0

Leave a Reply