24 மணி நேர பேட்டரி லைஃப் உடன் ஓப்போ என்கோ ஏர் விரைவில் | வெளியீட்டு தேதி இதுதான்

24 April 2021, 4:26 pm
Oppo Enco Air India Launch Date
Quick Share

ஓப்போ இந்த மாத தொடக்கத்தில் இத்தாலியில் என்கோ ஏர் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்ஸை அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனம் இதை மற்ற நாடுகளின் சந்தைகளிலும் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. விரைவில் நிறுவனம் இந்த இயர்பட்ஸை ஓப்போ K9 5ஜி ஸ்மார்ட்போனுடன் மே 6 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஓப்போவின் இந்த இயர்பட்ஸ் 24 மணி நேர பேட்டரி லைஃப் மற்றும் புளூடூத் V5.2 உடன் வருகின்றது. 

ஓப்போ என்கோ ஏர் விலை

ஓப்போ இத்தாலியில் இந்த ஓப்போ என்கோ ஏர் இயர்பட்ஸை யூரோ 99 (அதாவது சுமார் ரூ.9,000) விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வழங்கப்படும். விரைவில் இந்த TWS காதணிகள் அமேசான் மூலம் விற்பனை செய்யப்படும். அமேசான் அல்லது ஓப்போவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் விற்பனை தொடர்பான எந்த விவரமும் இப்போது இல்லை. 

விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்

ஓப்போ என்கோ ஏர் அழைப்பின் போது சத்தம் ரத்துசெய்யும் AI செயல்பாட்டுடன் இரட்டை மைக்ரோஃபோனைக் கொண்டிருக்கும். இது இயர்பட்ஸ் ஹியூமன் பைனாரல் ஹியரிங் சிஸ்டம் போல செயல்படுகிறது, இது மனித குரல்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் மற்றும் பின்னணி இரைச்சலில் இருந்து பிரிக்கிறது. ஓப்போ என்கோ ஏர் தொடுதல் கட்டுப்பாட்டுடன் வருகிறது, இது பாடல்கள், ஒலி அளவு, அழைப்பு எடுப்பது, வாய்ஸ் அசிஸ்டன்ட் செயல்படுத்துதல் போன்ற அம்சங்களையும் கட்டுப்படுத்த உங்களை அனுமதிக்கிறது.

TWS இயர்பட்ஸ் 440mAh பேட்டரியைக் கொண்ட ஒரு கேஸை கொண்டுள்ளன, இது ஒரே ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 24 மணிநேரம் வரை நீடிக்கும். இது வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது, ஓப்போ என்கோ ஏர் 8 நிமிட பேட்டரி ஆயுளை 10 நிமிட சார்ஜிங் உடன் வழங்க முடியும். ஓப்போ என்கோ ஏர் HeyMelody பயன்பாட்டின் மூலம் சிறப்பாக நிர்வகிக்க முடியும். 

Views: - 2059

0

0

Leave a Reply