30 மணி நேர பேட்டரி லைஃப் உடன் ஓப்போ என்கோ ஃப்ரீ 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்!

29 May 2021, 9:10 am
Oppo Enco Free 2 true wireless earbuds launched with up to 30 hour battery life
Quick Share

ஓப்போ ரெனோ 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்துடன், நிறுவனம் தனது வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆன ஓப்போ என்கோ ஃப்ரீ 2 சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த வயர்லெஸ் இயர்பட்ஸின் விலை 599 யுவான் (தோராயமாக ரூ.7,000) ஆகும். இது கேலக்ஸி வைட் மற்றும் எக்ஸ்ட்ரீம் நைட் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

ஓப்போ என்கோ ஃப்ரீ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 10 மிமீ டைனமிக் டிரைவர் மற்றும் டிரிபிள்-கோர் இரைச்சல் குறைக்கும் சிப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது அதிகபட்சமாக 42 dB  வரை இரைச்சல் குறைக்கும் திறன் கொண்டது. இது Android மற்றும் iOS சாதனங்களுடன் இணைக்க AAC கோடெக்குடன் புளூடூத் 5.2 இணைப்பை ஆதரிக்கிறது.

பேட்டரியைப் பொறுத்தவரை, இந்த இயர்பட்ஸ் 41 mAh பேட்டரியுடன் வருகிறது, இது ANC ஆஃப் செய்யப்பட்டிருக்கும் போது 6.5 மணிநேர பிளேபேக்கையும், ANC ON இல் இருக்கும்போது 4 மணிநேர பிளேபேக்கையும் வழங்குகிறது. இதன் கேஸில் 480 mAh பேட்டரி உள்ளது, இது ANC இல்லாமல் மொத்தம் 30 மணிநேர பேட்டரி லைஃபையும், ANC உடன் 20 மணிநேர பேட்டரி லைஃபையும் வழங்குகிறது.

இந்த இயர்பட்ஸ் டேனிஷ் ஆடியோ நிறுவனமான டைனாடியோ மூலம் டியூன் செய்யப்படுகிறது. இது குறைந்த லேட்டன்சி கேமிங் பயன்முறையைக் கொண்டுள்ளனர், இது 94 ms தாமதத்தை அடைய முடியும். AI அழைப்பு சத்தம் குறைப்பதற்கான மூன்று மைக்ரோஃபோன்களையும் இது கொண்டுள்ளது. 

ஹெட்ஃபோன்களை கழற்றாமல் பயனர்கள் ஒரே கிளிக்கில் சுற்றுப்புற ஒலிகளைக் கேட்க transparent mode உள்ளது. இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போனுக்கு ரிமோட் ஷட்டராகவும் இந்த இயர்பட்ஸ் செயல்படுகின்றன.

இது ஒலி அளவு மற்றும் இசைக் கட்டுப்பாட்டுக்கான தொடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. இது detection sensor கொண்டுள்ளதால் ஹெட்செட் அகற்றப்படும்போது தானாகவே ஆடியோ pause செய்யப்படும், மேலும் நீங்கள் கேஸைத் திறக்கும்போது அது தானாக தொலைபேசியுடன் இணைகிறது. இயர்பட்ஸ் IP54 சான்றளிக்கப்பட்ட நீர் மற்றும் தூசி எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளது.

Views: - 136

0

0