ஓப்போ F19 அறிமுகம்: குறைந்த விலையில் கிடைக்கும் 48 MP கேமரா, 5,000 mAh பேட்டரி! விவரங்கள் இதோ

6 April 2021, 5:59 pm
Oppo F19 launched in India with 48MP triple cameras, 5,000mAh battery: Price, Specifications
Quick Share

கடந்த மாதம் இந்தியாவில் F19 புரோ மற்றும் F19 புரோ+ 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய பின்னர், ஓப்போ நிறுவனம் இப்போது ஓப்போ F19 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.43 அங்குல FHD + AMOLED டிஸ்ப்ளே, 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா ஸ்னாப்டிராகன் 662 SoC, 5,000WAA பேட்டரி 33W வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவு மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஓப்போ F19 விலை

ஒரே ஒரு 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் கிடைக்கும் ஓப்போ F19 விலை ரூ.18,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி மிட்நைட் ப்ளூ மற்றும் பிரிசம் பிளாக் கலர் விருப்பங்களில் வருகிறது. இது பல்வேறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்கள் மூலம் நாட்டில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கிறது. இது பிளிப்கார்ட், அமேசான் இந்தியா வலைத்தளம் மற்றும் பிற ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் இருந்து ஏப்ரல் 9 முதல் வாங்க கிடைக்கும்.

ஓப்போ F19 விவரக்குறிப்புகள்

ஓப்போ F19 6.43 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவுடன் முழு HD+ (1,080×2,400 பிக்சல்கள்) திரை தெளிவுத்திறன் கொண்டது, 600 நைட்ஸ் பிரகாசம், 20: 9 திரை விகிதம் மற்றும் 90.8 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC உடன் இயக்கப்படுகிறது, அதோடு அட்ரினோ 610 GPU மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் உள்ளது.

மைக்ரோ SD கார்டைப் பயன்படுத்தி 256 ஜிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்கலாம். இது டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உடன் வருகிறது.

கேமராவைப் பொறுத்தவரை, ஓப்போ F19 ஒரு டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டருடன் வருகிறது. முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் உள்ளது.

ஓப்போ F19 5000 mAh பேட்டரியை 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர் OS 11.1 இல் இயங்குகிறது.

இணைப்பு அம்சங்களில் இரட்டை 4ஜி VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5.0, GPS / GLONASS / Beidou, USB Type-C மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தொலைபேசி 160.3×73.8×7.95 மிமீ அளவுகளையும் மற்றும் 175 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

Views: - 0

0

0

Leave a Reply