ஓப்போ ஃபைண்ட் X3 ப்ரோ முக்கிய விவரக்குறிப்புகள், படங்கள் இணையத்தில் கசிவு – விவரங்கள் இங்கே
4 February 2021, 1:51 pmஓப்போ மார்ச் மாதத்திற்குள் ஓப்போ ஃபைண்ட் X3 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் ஓப்போ ஃபைண்ட் X3 மற்றும் ஃபைண்ட் X3 ப்ரோ ஆகியவை இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது ஓப்போ ஃபைண்ட் X3 ப்ரோவின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது.
ஃபைண்ட் X3 சீரிஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 செயலி உடன் இயக்கப்படும் என்பதை ஓப்போ முன்பே உறுதிப்படுத்தி உள்ளது. டிப்ஸ்டர் இவான் பிளாஸ் மூலம் வெளியான புதிய கசிவின்படி, பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓப்போ ஃபைண்ட் X3 ப்ரோ இன்னும் அறிவிக்கப்படாத 50 MP சோனி IMX 766 முதன்மை சென்சாருடன் அதிவேக கேமரா சென்சாரைப் பயன்படுத்தும், அவற்றின் விவரங்கள் தற்போது தெரியவில்லை. ஓப்போ ஃபைண்ட் X3 ப்ரோ 3 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.
ஓப்போ ஃபைண்ட் X3 ப்ரோவின் நான்காவது கேமரா 13 மெகாபிக்சல் சென்சார், டெலிஃபோட்டோ லென்ஸுடன் இணையாக 2x ஆப்டிகல் ஜூம் உடன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் cloud testing தளத்தில் காணப்பட்டது, இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் வரும் என்று தெரியவந்தது.
ஓப்போ ஃபைண்ட் X3 ப்ரோ 1440×3216 பிக்சல் மற்றும் 120 Hz புதுப்பிப்பு வீதக் டிஸ்பிளேவுடன் QHD+ திரை தெளிவுத்திறன் கொண்ட 6.7 அங்குல வளைந்த டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இது 4500 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும், இதில் 65W சூப்பர் VOOC 2.0 வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வயர்டு சார்ஜிங் மற்றும் 30W VOOC ஏர் வயர்லெஸ் சார்ஜிங் இருக்கும். மென்பொருள் முன்னணியில், ஸ்மார்ட்போன் Android 11- அடிப்படையிலான கலர் OS 11.2 உடன் இயங்கக்கூடும்.
இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை மற்றும் நீல வண்ண விருப்பங்களில் வரும். ஃபைண்ட் X3 தொடரின் வெளியீட்டு தேதியை ஓப்போ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. கூடுதலாக, ஓப்போ ஃபைண்ட் X3 நியோ மற்றும் ஃபைண்ட் X3 லைட் ஆகியவையும் ஃபைண்ட் X3 ப்ரோவுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபைண்ட் X3 லைட் 2020 டிசம்பரில் சீனாவில் அதிகாரப்பூர்வமாக வெளியான ரெனோ 5 5ஜி ஸ்மார்ட்போனின் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பதிப்பு என்றும் கூறப்படுகிறது.
0
0
1 thought on “ஓப்போ ஃபைண்ட் X3 ப்ரோ முக்கிய விவரக்குறிப்புகள், படங்கள் இணையத்தில் கசிவு – விவரங்கள் இங்கே”
Comments are closed.