ஓப்போ ஃபைண்ட் X3 சீரிஸ் போன்களின் விலைகள் இவ்வளவா? ஷாக் ஆன ரசிகர்கள்!

26 February 2021, 9:52 am
Oppo Find X3 Pro, X3 Neo, X3 Lite Price Tipped Ahead Of Launch
Quick Share

விரைவில் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் தொடரை அறிமுகம் செய்ய ஓப்போ தயாராகி வருகிறது. புதிய ஓப்போ ஃபைண்ட் X3 தொடரில் ஓப்போ ஃபைண்ட் X3, ஃபைண்ட் X3 நியோ, ஃபைண்ட் X3 லைட் மற்றும் பலவற்றை மார்ச் 11 அன்று அறிமுகம் செய்யும் என்று ஊகிக்கப்படுகிறது. இப்போது, ​​புதிய ஓப்போ ஃபைண்ட் X3 தொடரின் விலை மற்றும் பிற முக்கிய விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஓப்போ ஃபைண்ட் X3 சீரிஸ் விலை விவரங்கள்

வரவிருக்கும் ஓப்போ ஃபைண்ட் X3 ப்ரோ 5ஜி வெள்ளை, கருப்பு, ஆரஞ்சு மற்றும் நீலம் போன்ற நான்கு வண்ணங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொலைபேசி ஒரே ஒரு 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுடன் அறிமுகமாகும், இது 1,000 யூரோ முதல் 1,200 யூரோ வரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.88,000 முதல் ரூ.1,06,000 வரை விலைகளைக் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

கூடுதலாக, ஓப்போ ஃபைண்ட் X3 நியோ ஒரு 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலிலும் வரும். ஃபைண்ட் X3 நியோ மறுபெயரிடப்பட்ட ஓப்போ ரெனோ 5 புரோ+ என்றும் வெள்ளி மற்றும் கருப்பு வண்ண விருப்பங்களில் வரும் என்றும் கூறப்படுகிறது. ஃபைண்ட் X3 நியோ போனுக்கு 700 யூரோ முதல் 800 யூரோ வரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.61,000 முதல் 70,000 வரை செலவாகும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடைசியாக, ஓப்போ ஃபைண்ட் X3 லைட் போனானது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மறுபெயரிடப்பட்ட ஓப்போ ரெனோ 5 5ஜி ஸ்மார்ட்போன் என்று நம்பப்படுகிறது, மேலும் இது நீல மற்றும் கருப்பு ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். ஓப்போ ஃபைண்ட் X3 லைட் 400 யூரோ முதல் 500 யூரோ வரை இந்திய மதிப்பில் சொல்லவேண்டுமெனில் சுமார் ரூ.35,000 முதல் ரூ.44,000 வரை விலைகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

Views: - 14

0

0