ஓப்போ ஃபைண்ட் X3 சீரிஸ் வெளியாகும் தேதி இதுதான்! விவரங்கள் இதோ

28 February 2021, 10:34 am
Oppo is expected to launch the Find X3 series in March, and it looks like the launch date is out. Thanks to a leaked poster we now know that the Oppo Find X3 series will launch on March 11.
Quick Share

ஓப்போ மார்ச் மாதத்தில் ஃபைண்ட் X3 ஸ்மார்ட்போன் தொடரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வெளியீட்டு தேதியும் வெளியாகிவிட்டது. கசிந்த போஸ்டரில் உள்ள தகவலின்படி ஓப்போ ஃபைண்ட் X3 தொடர் மார்ச் 11 அன்று அறிமுகமாகும் என்பது தெரியவந்துள்ளது.

ஓப்போ ஃபைண்ட் X3 தொடர் முதன்முதலில் சீனாவில் அறிமுகமாகும், அங்கு மார்ச் 11 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி இரவு 7:30 மணிக்கு நிகழ்வு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. 

ஃபைண்ட் X3 தொடரில் ஓப்போ குறைந்தது நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இரண்டு மட்டுமே மார்ச் 11 அன்று அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. இவற்றில் ஓப்போ ஃபைண்ட் X3 மற்றும் ஃபைண்ட் X3 ப்ரோ ஆகியவை அடங்கும். ஃபைண்ட் X3 நியோ மற்றும் ஃபைண்ட் X3 லைட் ஆகியவை பிற இரண்டு தொலைபேசிகளாகும்.

விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, ஓப்போ ஃபைண்ட் X3 ப்ரோ குவால்காமின் ஸ்னாப்டிராகன் 888 செயலி மூலம் 12 ஜிபி ரேம் உடன் இணைக்கப்படும். இதில் ஒரு ஜோடி 50 மெகாபிக்சல் சோனி IMX 766 கேமராக்கள், 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 3 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவை 25x ஜூம் உடன் வரும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் QHD+ டிஸ்ப்ளே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். 

வெணிலா ஓப்போ ஃபைண்ட் X3 குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 செயலி மூலம் இயக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் FHD+ டிஸ்ப்ளே, 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12.6 மெகாபிக்சல் கேமரா இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 1

0

0