குவாட் கேமராக்களுடன் நவம்பர் 4 ஆம் தேதி அறிமுகமாகிறது இந்த புதிய ஓப்போ போன்!

29 October 2020, 8:58 pm
Oppo K7x to be announced on November 4, to sport quad cameras
Quick Share

ஓப்போ K7 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஆகஸ்டில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது ஓப்போ, நவம்பர் 4 ஆம் தேதி சீனாவில் OPPO K7x ஸ்மார்ட்போனை அறிவிக்கப்போவதாகவும், டபுள் லெவன் விற்பனையின் கீழ் சீனாவில் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.

வெளியீட்டு சுவரொட்டியை நிறுவனம் தனது வெய்போ கணக்கில் வெளியிட்டுள்ளது. ஓப்போ K7x 5 ஜி இணைப்பைக் கொண்டிருக்கும் என்பதையும், சாதனத்தின் பின்புறத்தில் மேல் இடது மூலையில் ஒரு செவ்வக வடிவ கேமரா அமைக்கப்படுவதையும் இது காட்டுகிறது.

சமீபத்தில் TENAA இல் காணப்பட்ட OPPO PERM00 தொலைபேசி ஓப்போ K7x ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பட்டியலின் படி, வரவிருக்கும் ஓப்போ போன் 6.5 இன்ச் எல்சிடி திரையுடன் வரும், இது முழு எச்டி + ரெசல்யூஷன் 1080 x 2400 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் மற்றும் 20: 9 திரை விகிதத்தை கொண்டிருக்கும். இந்த சாதனம் அறியப்படாத 2GHz ஆக்டா கோர் செயலி உடன் இயக்கப்படும்.

இது 6 ஜிபி, 8 ஜிபி ரேம் மாறுபாடுகளுடன் 64 ஜிபி, 128 ஜிபி, மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும். கூடுதல் சேமிப்பகத்திற்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் இருக்கும். தொலைபேசி Android 10 OS ஐ இயக்கும்.

கேமராவைப் பொறுத்தவரை, தொலைபேசியில் 48 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் + 2-மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்ட குவாட் கேமரா அமைப்பு இருக்கும். இதன் முன் கேமரா 16 மெகாபிக்சல் கொண்டிருக்கும்.

தொலைபேசி 162.2 x 75.1 x 9.1 மிமீ அளவிடும் மற்றும் அதன் எடை 194 கிராம். இது பச்சை, சாம்பல் மற்றும் நீல வண்ணங்களில் வரும். இந்த சாதனம் 4,910 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி கொண்டிருக்கும்.

Views: - 19

0

0

1 thought on “குவாட் கேமராக்களுடன் நவம்பர் 4 ஆம் தேதி அறிமுகமாகிறது இந்த புதிய ஓப்போ போன்!

Comments are closed.