ஜூன் இறுதிக்குள் ஓப்போவின் வேற லெவல் ஸ்மார்ட்போன்! நீங்க எதிர்பார்க்குறது விட செம்மயா இருக்கும்

Author: Dhivagar
12 March 2021, 4:32 pm
OPPO may launch its first foldable phone by June-end
Quick Share

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான OPPO தனது முதல் மடிக்கக்கூடிய தொலைபேசியை இந்தாண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது  ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் ஒரு மடிக்கக்கூடிய சாதனமாக இருக்கும், ஆனால் இது OPPO X 2021 கான்செப்ட் போன்ற சுருட்டக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்காது.  OPPO X 2021 கான்செப்ட் எப்போதும் உண்மையான தயாரிப்பாக மாறப்போவதில்லை என்றும் GSMArena தெரிவித்துள்ளது.

ஓப்போ உடன், சியோமி, விவோ, மற்றும் கூகிள் ஆகியவையும் கூட 2021 ஆம் ஆண்டில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் களத்தில் சேரப்போவதாக வதந்திகள் வெளியாகியுள்ளன. மேலும் சாம்சங் அவற்றுக்கு மடிக்கக்கூடிய OLED டிஸ்பிளே பேனல்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஓப்போ ஒரு கிளாம்ஷெல் வடிவமைப்பைக் கொண்டிருக்கும், மேலிருந்து கீழாக மடிக்கக்கூடியதாக இருக்கும். டிஸ்பிளே அளவு 7.7-இன்ச் விரிவடையக்கூடியது, வெளிப்புறத் திரை 1.5 முதல் 2-இன்ச் வரை இருக்கும் என்று தி எலெக் தெரிவித்துள்ளது.

8.03 அங்குல டிஸ்ப்ளே கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், சியோமி இன்-ஃபோல்டு வடிவமைப்பிற்கு மாறுகிறது.

மேலும், தேடுபொறி நிறுவனமான கூகிள் 7.6 அங்குல அளவுடன் மடிக்கக்கூடிய OLED பேனலை உருவாக்கவும் சாம்சங் நிறுவனத்திடம் கோரியுள்ளது என்ற தகவலும்  வெளியாகியுள்ளது.

கூடுதலாக, சாம்சங் சமீபத்தில் கேலக்ஸி Z ஃபிளிப் 5 ஜிக்கு ஒத்த கிளாம்ஷெல் மடிக்கக்கூடிய தொலைபேசியின் காப்புரிமையை தாக்கல் செய்தது, ஆனால் பெரிய கவர் டிஸ்பிளே, அதிக கேமராக்கள் மற்றும் சிறந்த ஹின்ஜ் ஆகியவற்றைக் கொண்டது.

Views: - 66

0

0