ஓப்போ ரெனோ 5 புரோ முழு விவரக்குறிப்புகள் TENNA பட்டியல் மூலம் வெளியானது | முக்கிய விவரங்கள் இங்கே

26 November 2020, 1:19 pm
Oppo Reno 5 Pro Full Specifications Revealed Via TENNA Listing
Quick Share

ஓப்போ ரெனோ 5 சீரிஸ் டிசம்பர் மாதம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்தத் தொடரில் ரெனோ 5, ரெனோ 5 ப்ரோ மற்றும் ரெனோ 5 ப்ரோ பிளஸ் ஆகியவை அடங்கும். வெளியீட்டு நாள்  நெருங்க நெருங்க, பல்வேறு கசிவுகள் வெளிவருகின்றன. முன்னதாக, ஓப்போ ரெனோ 5 சீரிஸ் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் என்றும் ஸ்டாரி ட்ரீம், அரோரா ப்ளூ, மூன்லைட் பிளாக் மற்றும் ஸ்டார் விஷ் ரெட் ஷேட்களில் வரக்கூடும் என்றும் தெரியவந்தது.

இப்போது, ​​TENAA பட்டியல் ரெனோ 5 ப்ரோவின் முழு விவரக்குறிப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளது. ரெனோ 5 ப்ரோவின் முழுமையான விவரக்குறிப்பு இங்கே.

ஓப்போ ரெனோ 5 ப்ரோ – எதிர்ப்ர்க்கப்படும் விவரக்குறிப்புகள்

TENAA பட்டியலின் படி, ரெனோ 5 ப்ரோ 6.55 அங்குல முழு HD+ டிஸ்ப்ளே 1080 x 2340 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்டதாக இருக்கும். இருப்பினும், பட்டியல் புதுப்பிப்பு வீதத்தைப் பற்றி எதையும் வெளிப்படுத்தாது. இது அதிக புதுப்பிப்பு வீதத்தை வழங்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஹூட்டின் கீழ், சாதனம் அதன் சக்தியை 2.6GHz ஆக்டா கோர் செயலியில் இருந்து பெறும். ஜீக்பெஞ்ச் பட்டியலின் படி, ரெனோ 5 ப்ரோ டைமன்சிட்டி 1000+ செயலியைக் கொண்டிருக்கும்.

தொலைபேசி 8 ஜிபி / 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி உள் சேமிப்புடன் வருமென்று பட்டியலிடப்பட்டுள்ளது. பேட்டரியைப் பொறுத்தவரை, தொலைபேசி 4,250 mAh திறன் கொண்ட இரட்டை செல் பேட்டரியை பேக் செய்யும் என்று கூறப்படுகிறது. மென்பொருளைப் பொறுத்தவரையில், கைபேசி ஆன்ட்ராய்டு 11 OS இல் இயங்கும். கேமராக்களைப் பொறுத்தவரை, ரெனோ 5 ப்ரோவின் பின்புறத்தில் ஒரு குவாட் கேமரா அமைப்பு இருக்கும்.

கேமரா தொகுதி 64MP முதன்மை கேமரா சென்சார், 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் இரண்டு 2MP சென்சார்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. செல்ஃபி மற்றும் வீடியோக்களுக்காக, ரெனோ 5 ப்ரோ 32 MP முன் கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கைபேசி 5 ஜி, 4 ஜி VoLTE, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-C ஆகியவற்றை கொண்டிருப்பதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. கடைசியாக, ஸ்மார்ட்போன் 173 கிராம் எடையையும் மற்றும் 7.6 மிமீ தடிமன் கொண்டதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Views: - 22

0

0