டைமன்சிட்டி 800U செயலியுடன் ஓப்போ Reno 6 Z ஸ்மார்ட்போன் அதிகாரபூர்வ அறிமுகம் | விலை & விவரங்கள்

21 July 2021, 3:15 pm
OPPO Reno6 Z, with Dimensity 800U processor, goes official
Quick Share

தொழில்நுட்ப நிறுவனமான ஓப்போ தனது ஓப்போ ரெனோ 5Z ஸ்மார்ட்போன் தொடரின் அடுத்த பதிப்பாக, தாய்லாந்தில் ரெனோ 6Z மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ரெனோ 6 வரிசையில் தற்போதுள்ள ரெனோ 6, ரெனோ 6 புரோ மற்றும் ரெனோ 6 புரோ+ மாடல்களுடன் இணைகிறது.

இந்த கைபேசி 6.4 இன்ச் டிஸ்ப்ளே, 64 MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, மீடியா டெக் டைமன்சிட்டி 800U சிப்செட் மற்றும் 4,310 mAh பேட்டரி ஆகியவற்றை வழங்குகிறது.

ஓப்போ ரெனோ 6Z ஒரு பஞ்ச்-ஹோல் கட்-அவுட்டை ஒரு குறிப்பிடத்தக்க கீழ்பக்க பெசல் மற்றும் டிஸ்பிளேவில் கைரேகை ஸ்கேனர் உடன் கொண்டுள்ளது. பின்புறத்தில், இது ஒரு செவ்வக டிரிபிள் கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது.

இந்த சாதனம் 6.4 அங்குல முழு-HD+ (1080×2400 பிக்சல்கள்) AMOLED திரையை 20:9 என்ற விகிதத்துடன் மற்றும் 800-நைட்ஸ் உச்ச பிரகாசத்துடன் கொண்டுள்ளது.

இது அரோரா மற்றும் ஸ்டெல்லர் பிளாக் வண்ணங்களில் வாங்க கிடைக்கும்.

ஓப்போ ரெனோ 6Z 64 எம்.பி முதன்மை சென்சார், 8 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 32 எம்.பி செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது.

ஓப்போ ரெனோ 6Z மீடியா டெக் டைமன்சிட்டி 800U செயலியில் இருந்து ஆற்றல் பெறுகிறது, இது 8 ஜிபி RAM, 5 ஜிபி வரை நீட்டிக்கப்பட்ட RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான கலர்OS 11.1 இல் இயங்குகிறது மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,310 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இணைப்பிற்காக, கைபேசி வைஃபை, புளூடூத் 5.1, GPS, 5ஜி, ஒரு ஹெட்போன் ஜேக் மற்றும் டைப்-C போர்ட் ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்குகிறது.

ஓப்போ நிறுவனம் இப்போது வரை ரெனோ 6Z ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விலை விவரங்களை அறிவிக்கவில்லை. இருப்பினும், வியட்நாமில் ஓப்போ நிறுவனம் இந்த கைபேசியை VND 9,490,000 (சுமார் ரூ.30,800) விலையில் விற்பனைச் செய்கிறது.

Views: - 62

0

0

Leave a Reply