இந்தியாவில் ஓப்போ ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறைந்தது | முழு பட்டியல் இங்கே

21 November 2020, 10:02 pm
Oppo Smartphones That Got Price Cut In India: Everything You Need To Know
Quick Share

ஓப்போ நிறுவனம் ஓப்போ A12, A15, ரெனோ 3 ப்ரோ மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட F17 உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. மகேஷ் டெலிகாம் வழியாக தெரியவந்துள்ளது. ரெனோ 3 ப்ரோவின் விலை ரூ.2,000 குறைக்கப்பட்டுள்ளது. கைபேசிகளின் புதிய விலையை இங்கே பார்க்கலாம். முந்தைய விலைக் குறியீட்டுடன் தொலைபேசிகள் இ-காமர்ஸ் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதால் புதிய விலைகள் ஆஃப்லைன் சந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிகிறது.

ஓப்போ A12 புதிய விலை 

ஓப்போ A12, கைபேசியில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு அதன் முந்தைய விலையான ரூ.9,490 விலையில் ரூ.500 குறைக்கப்பட்டு ரூ.8,990 க்கு விற்பனையாகிறது.

ஓப்போ A15 புதிய விலை 

ஓப்போ A15 போனின் 2 ஜிபி ரேம் விருப்பத்திற்கு ரூ.8,990 விலையும், 3 ஜிபி ரேம் விருப்பத்திற்கு இப்போது ரூ.9,990 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஓப்போ ரெனோ 3 ப்ரோ புதிய விலை 

ஓப்போ ரெனோ 3 ப்ரோ அதன் இரு சேமிப்பு மாறுபாட்டிற்கும் விலை குறைப்பு பெறுகிறது. 128 ஜிபி சேமிப்பு இப்போது ரூ.24,990 விலையும், 256 ஜிபி ஸ்டோரேஜ்  மாடலுக்கு இப்போது ரூ.27,990 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஓப்போ F17 புதிய விலை 

கடைசியாக, ஓப்போ F17 இப்போது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.18,490 விலைக்கொண்டுள்ளது. ஓப்போ எஃப் 17 புரோவுடன் ஓப்போ F17 கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. கைபேசி ஒரு சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றை வழங்குகிறது, மேலும் இது ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது.

Views: - 35

0

0

1 thought on “இந்தியாவில் ஓப்போ ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறைந்தது | முழு பட்டியல் இங்கே

Comments are closed.