உங்கள் பணம் பத்திரமா இருக்கு கவலைப்பட வேண்டாம்! Paytm நிறுவனம் ட்வீட்

18 September 2020, 3:35 pm
Paytm app removed from Google Play Store
Quick Share

கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து Paytm செயலி அகற்றப்பட்டுள்ளது. Android பயனர்களுக்கு இந்த செயலி இனிமேல் பதிவிறக்கம் செய்ய கிடைக்காது. பிளே ஸ்டோரிலிருந்து Paytm செயலி நீக்கப்பட்டதற்கான காரணம் Paytm செயலியில் உள்ள பேண்டஸி கேம்ஸ் என்று சொல்லப்படுகிறது.

கூகிள் தகவல்:

இன்று ஒரு வலைப்பதிவு இடுகையை வெளியிட்டது, சூதாட்டம் குறித்த பிளே ஸ்டோரின் கொள்கைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், வலைப்பதிவு இடுகையில் Paytm செயலியின் பெயரை கூகிள் குறிப்பிடப்படவில்லை.

“நாங்கள் ஆன்லைன் கேசினோ அல்லது முறைபடுத்தப்படாத சூதாட்ட செயலிகள் போன்றவற்றை ஆதரிக்க மாட்டோம். ஒரு செயலி நுகர்வோரை வேறொரு வலைத்தளத்திற்கு அழைத்துச் சென்று, உண்மையான பணம் அல்லது பணப் பரிசுகளை வெல்ல கட்டண சூதாட்ட போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்குமாயின் அது எங்கள் கொள்கைகளை மீறுவதாகும்” என்று கூகிள் வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது.

மீண்டும் வருமா?

இது போன்ற கொள்கை மீறல் இருந்ததால் Paytm டெவலப்பருக்கு தெரிவிக்கப்பட்டு, செயலி பிளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும் கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொள்கை வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க தொடங்கினால், பிளே ஸ்டோரில் செயலியை மீண்டும் பதிவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  Paytm தரப்பிலிருந்து எந்தவித தகவலும் இல்லை.

பணம் பத்திரமா இருக்கு!

“அன்புள்ள Paytm பயனர்களே, கூகிளின் பிளே ஸ்டோரிலிருந்து Paytm Android பயனர்களுக்கு தற்காலிகமாக கிடைக்கவில்லை. இது மிக விரைவில் மீண்டும் வரும். உங்கள் பணம் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது, மேலும் உங்கள் Paytm செயலியை இயல்பாக தொடர்ந்து பயன்படுத்த முடியும்” என்று பயனர்களுக்கு நம்பிக்கைத் தரும் பதிவொன்றை ட்விட்டரில் Paytm பதிவிட்டுள்ளது.

இப்போதும் கிடைக்கிறது!

Paytm இன்னும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது, மேலும் தங்கள் ஆன்ட்ராய்டு தொலைபேசிகளில் Paytm செயலியைப் பதிவிறக்க செய்துள்ளவர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

இதுவரை செயலியின் சேவைகளில் எந்தவித சிக்கலும் இல்லை. மேலும், வணிக பயன்பாடன Paytm for Business செயலி இன்னும் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.

Paytm என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் மிகப்பெரிய வணிக தொழில்நுட்ப செயலிகளில் ஒன்றாகும். சென்சார் டவரின் சமீபத்திய தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஃபின்டெக் செயலிகளில் ஆறாவது இடத்தில் Paytm உள்ளது. இந்த காலகட்டத்தில் செயலி 6.7 மில்லியன் நிறுவல்களையும் கொண்டுள்ளது. Paytm மொத்தம் 450 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயன்பாடானது ஆன்லைன் ஷாப்பிங், கேமிங், வங்கி மற்றும் பலவற்றை வழங்கும் தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0