சொன்னதுபோல் செய்தது Paytm! மீண்டும் கூகிள் பிளே ஸ்டோருக்கு வந்தது! பயனர்கள் நிம்மதி!

18 September 2020, 8:31 pm
Paytm returns to the Google Play Store
Quick Share

Paytm க்கு இன்று ஒரு கடினமான நாள் என்றே  சொல்ல்லாம். இன்று  முற்பகலில் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்ட பிறகு, சில மணிநேரங்களில் மீண்டும் கூகிள் பிளே ஸ்டோரில் தடம் பதித்துள்ளது Paytm. இன்று முற்பகலில், கூகிள் ஆப் ஸ்டோர் கொள்கைகளை மீறியதற்காக பிளே ஸ்டோரிலிருந்து Paytm அகற்றப்பட்டது.

கூகிள் ஏன் செயலியை அகற்றியது என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக விளக்கவில்லை என்றாலும், நிறுவனம் வெளியிட்ட வலைப்பதிவு அதன் பின்னணியில் உள்ள காரணத்திற்கான தெளிவைக் கொடுத்தது.

பேண்டசி கேமிங் அம்சங்களை வழங்குவதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் Paytm கூகிள் தளத்தில் இருந்து அகற்றப்பட்டது.  Federation of Indian Fantasy Sports (FIFS) அல்லது இந்திய பேண்டஸி ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பு இந்த பிரச்சினையை எழுப்பிய பின்னர் இந்த நடவடிக்கையை கூகிள் எடுத்தது. 

இப்போது FIFS ஒரு ட்வீட்டின் வாயிலாக, பேண்டஸி ஸ்போர்ட்ஸ் என்பது இந்திய உச்சநீதிமன்றத்தால் ‘கேம் ஆஃப் ஸ்கில்’ என அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், அனைத்து பேண்டஸி கேமிங் ஆப்களையும் FIFS உறுப்பினர்களின் சார்பாக பிளே ஸ்டோரில் அனுமதிக்குமாறு கூகிளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த கோரிக்கையை அடுத்து இப்போது ​​ஆப் ஸ்டோரில் Paytm மீண்டும் ஆன்லைனில் உள்ளது. Paytm பயனர்கள் எப்போதும் போல  செயலியைப் பயன்படுத்தலாம்.

Views: - 0 View

0

0