பெகாசஸ் உளவு கருவி என்பது என்ன? இது எவ்வாறு இயங்கும்? இதன் விலை என்ன? யார் வாங்க முடியும்? வாட்ஸ்அப்பும் கண்காணிக்கப்படுமா?

19 July 2021, 4:46 pm
Pegasus spy tool who can buy and all details
Quick Share

இன்று பெகாசஸ் ஸ்பைவேர் தான் தலைப்புச் செய்தியாக உள்ளது. தி வாஷிங்டன் போஸ்ட் உட்பட 16 ஊடகங்களின் புதிய அறிக்கையின்படி, பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வணிக நிர்வாகிகளை உளவுப் பார்க்க பெகாசஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மட்டுமே குறைந்தது 40 பத்திரிகையாளர்களின் ஸ்மார்ட்போன்கள் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்நிலையில் இந்த பெகாசஸ் பற்றி பலருக்கும் தெரிய வேண்டிய முக்கியமான தகவல்களை உங்களிடத்தில் கொண்டு வந்து சேர்க்கவே இந்த பதிவு.

பெகாசஸ் ஸ்பைவேர் கருவியை உருவாக்கியது யார்?

பெகாசஸ் ஸ்பைவேரை இஸ்ரேலை தளமாகக் கொண்ட கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனமான NSO குழுமம் உருவாக்கியுள்ளது, இது Q சைபர் டெக்னாலஜிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. 

இந்த பெகாசஸ் நீங்கள் ஆன்லைனில் பெறும் ஏதோ ஓர் சாதாரண ஸ்பைவேர் போன்றது கிடையாது. 

NSO குழும நிறுவனம் 2009 இல் இஸ்ரேலில் ஒரு சிறப்பு கண்காணிப்பு தொழில்நுட்ப தீர்வு வழங்குநராக நிறுவப்பட்டது. அந்நிறுவனத்தின் நன்கு அறியப்பட்ட உளவு பார்க்கும் தயாரிப்பு தான் பெகாசஸ். ஆனால் பெகாசஸ் தவிர வேறு பல தயாரிப்புகளை அந்நிறுவனம் உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

Pegasus spy tool who can buy and all details

இது குறித்து அந்நிறுவனம் வழங்கிய தகவலின்படி, “NSO என்பது ஒரு தொழில்நுட்ப நிறுவனமாகும், இது சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு அமைப்புகளால் தரவு பகுப்பாய்வு திறன்களை அதிகரிக்கவும், தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளை மேம்படுத்தவும், ட்ரோன்களின் ஊடுருவல்களுக்கு எதிராக பயனுள்ள எதிர் நடவடிக்கைகளை செயல்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறப்படுகிறது.

பெகாசஸ் ஸ்பைவேரை யார் வாங்க முடியும்?

அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்துடன் மட்டுமே பணியாற்றுவதாக NSO குழுமம் தெரிவித்துள்ளது. இந்த பெகாசஸ் ஸ்பைவேர் கருவி மெக்ஸிகோ மற்றும் பனாமா அரசாங்கங்களால் பயன்படுத்தப்படுவது பகிரங்கமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இது 40 நாடுகளில் 60 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. அதன் பயனர்களில் 51% புலனாய்வு முகவர்கள், 38% சட்ட அமலாக்க முகவர்கள் மற்றும் 11% இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

NSO குழுமம்  அரசாங்கங்களுக்காக பெகாசஸ் கருவியை இயக்குமா?

இது குறித்து NSO நிறுவனம் கூறியதாவது: “NSO குழுமம் பெகாசஸ் ஸ்பைவேரை இறையாண்மை கொண்ட மாநிலங்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் பயன்படுத்த உரிமம் அளிக்கிறது, தாங்கள் பெகாசஸை இயக்குவதில்லை, அதன் பயன்பாட்டில் எந்தவிதமான தெரிவுநிலையும் எங்களிடம் இல்லை, வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.

பெகாசஸ் ஒரு வெகுஜன கண்காணிப்பு கருவியா?

NSO குழுமத்தின் தகவலின்படி, பெகாசஸ் ஒரு வெகுஜன கண்காணிப்பு தொழில்நுட்பம் அல்ல. “இது கடுமையான குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குறிப்பிட்ட நபர்களின் மொபைல் சாதனங்களிலிருந்து தரவை மட்டுமே சேகரிக்கிறது” என்று நிறுவனம் தனது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், NSO குழுமம் “பெகாசஸ் ஸ்பைவேரை நேரடியாக இயக்கவில்லை” என்பதால் “அதன் பயன்பாட்டில் எந்தத் தெரிவுநிலையும் இல்லை” என்பதையும் நினைவில் கொள்க.

பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்துவதற்காகும் செலவு என்ன?

பெகாசஸ் ஸ்பைவேர் உரிமங்களின் (licenses) வடிவத்தில் விற்கப்படுகிறது மற்றும் உண்மையான விலைகள் ஒப்பந்தத்தைப் பொறுத்தது. ஒரு உரிமத்தின் விலை ரூ.70 லட்சம் வரை இருக்கும். ஒரு உரிமம் பெற்றாலே, பல ஸ்மார்ட்போன்களைக் கண்காணிக்க முடியும். 

கடந்த 2016 ஆம் ஆண்டின் மதிப்பீடுகளின்படி, பெகாசஸைப் பயன்படுத்தி வெறும் 10 பேரை உளவு பார்ப்பதற்காக, NSO குழுமம் குறைந்தபட்சம் ரூ.9 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. 

Pegasus spy tool who can buy and all details

2016 விலை பட்டியலின் படி, NSO குழுமம் தனது வாடிக்கையாளர்களுக்கு 10 சாதனங்களை ஹேக் செய்ய $650,000 (தற்போதைய பண மதிப்பு விகிதத்தில் ரூ.4.84 கோடி) வசூலித்துள்ளது, கூடுதலாக நிறுவல் கட்டணம் ஆக, $500,000 (ரூ.3.75 கோடி) வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெகாசஸைப் பயன்படுத்தும் தொலைபேசிகளிலிருந்து என்னென்ன தரவுகளை ரகசியமாகத் திருட முடியும்?

பெகாசஸ் கருவி மூலம், SMS பதிவுகள், தொடர்பு விவரங்கள், அழைப்பு வரலாறு, காலண்டர் பதிவுகள், மின்னஞ்சல்கள், உடனடி செய்தி மற்றும் உலாவல் வரலாறு போன்ற தகவல்களைப் பெறலாம். NSO குழுமத்தின் தயாரிப்பு சிற்றேட்டின் படி, பெகாசஸ் வாட்ஸ்அப், வைபர், ஸ்கைப் மற்றும் பிளாக்பெர்ரி மெசஞ்சரை போன்றவற்றையும் கூட உளவுப்பார்க்க முடியும் என்பது தெரியவந்துள்ளது. பெகாசஸ் ரகசியமாக புகைப்படங்கள் எடுக்க முடியும், அழைப்புகளை பதிவுச் செய்ய முடியும், சுற்றியுள்ள ஆடியோவைப் பதிவுசெய்தல் மற்றும் பயனரை எச்சரிக்காமல் ஸ்கிரீன் ஷாட்களை எடுத்தல் போன்ற பலவற்றுக்குப் பயன்படுகிறது. உளவு பணி முடிந்ததும், பாதிக்கப்பட்டவரின் தொலைபேசியில் பெகாசஸ் முகவரை சுயமாக நீக்க பெகாசஸ் ஆபரேட்டர் தொலைதூரத்தில் இதே  kill switch அம்சத்தைச் செயல்படுத்த முடியும்.

உளவு பார்ப்பதற்கு பெகாசஸ் கருவி எந்த ஸ்மார்ட்போன்களை ஆதரிக்கும்?

பெகாசஸ் ஸ்பைவேர் ஆண்ட்ராய்டு, iOS, விண்டோஸ் போன், பிளாக்பெர்ரி, சிம்பியன் மற்றும் டைசென் போன்ற சாதனங்களில் எல்லாம் இயங்கக்கூடியது.

உளவு பார்க்க வேண்டியவரின் தொலைபேசியில் பெகாசஸ் ஸ்பைவேர் எவ்வாறு நிறுவப்படுகிறது?

ஒருவரை உளவுப் பார்க்க பெகாசஸ் கருவியைப் பயன்படுத்துபவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்றால், தொலைதூரத்தில் இருந்தே ரகசியமாக இன்னொருவரின் போனில் ஸ்பைவேர் கருவியை நிறுவுவது தான். 

உளவு பார்க்க வேண்டியவரின் தொலைபேசியில் பெகாசஸை நிறுவ உதவியாக இருப்பவை ஃபிஷிங் மெசேஜ்கள் தான். உளவு பார்க்கப்பட வேண்டியவரின் தொலைபேசி எண் தெரியாவிட்டாலும் பெகாசஸ் சாஃப்ட்வேரை நிறுவ முடியும். உளவுப் பார்க்கபட வேண்டியவரின் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ID இல்லையென்றாலும், பேஸ் டிரான்ஸ்ஸீவர் ஸ்டேஷன் (BTS) போன்ற ஒரு தந்திரோபாய நெட்வொர்க் உறுப்பைப் பயன்படுத்தி எண்ணைப் பெற்றவுடன் பெகாசஸ் முகவரை அமைதியாக அவ்ரக்ளுக்கே தெரியாமல் செலுத்த முடியும்.

பெகாசஸ் ஸ்பைவேர் வேலை செய்ய என்ன தேவை?

Pegasus spy tool who can buy and all details

பெகாசஸ் ஸ்பைவேர் வேலை செய்ய பின்தளத்தில் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப கட்டமைப்பு தேவை. NSO குழு ஊழியர்கள் தங்கள் வாடிக்கையாளர் தளத்தைப் பார்வையிட்டு முழு வசதியையும் செய்து கொடுக்கின்றனர். பெகாசஸின் தயாரிப்பு சிற்றேட்டின் படி, “வாடிக்கையாளர் வளாகத்தில் பெகாசஸ் வன்பொருள் மற்றும் மென்பொருளை வரிசைப்படுத்தவும் கட்டமைக்கவும் NSO பொறுப்பேற்கும்” முழு அமைப்பிற்கும் WEB சர்வர்ஸ், கம்யுனிகேஷன் மாடுல், செல்லுலார் கம்யுனிகேஷன் மாடுல், பெர்மிஷன் மாடுல், டேட்டா ஸ்டோரேஜ், சேவையக பாதுகாப்பு, கணினி வன்பொருள் நிறுவல், ஆபரேட்டர் கன்சோல்கள் மற்றும் இறுதியாக பெகாசஸ் பயன்பாடு என மிகப்பெரிய தொழில்நுட்ப கட்டமைப்புத் தேவை.

பெகாசஸை இயக்குவதற்கான குறைந்தபட்ச தகவல் தொழில்நுட்ப ஹார்டுவேர் தேவை என்ன?

பெகாசஸ் செயல்பட குறைந்தபட்ச சிஸ்டம் ஹார்டுவேர் மற்றும் விவரக்குறிப்புகள் பின்வருமாறு:

செயலி: கோர் i5, மெமரி: 3 ஜிபி RAM, ஹார்ட் டிரைவ்: 320 GB மற்றும் ஆபரேட்டிங் சிஸ்டம்: விண்டோஸ் 7 ஆகிய விவரக்குறிப்புகளைக் கொண்ட ஆபரேட்டர் டெர்மினல்கள் அல்லது நிலையான டெஸ்க்டாப் பிசிக்கள் தேவை பெகாசஸ் செயல்பட தேவை.  

42U கேபினட் இரண்டு யூனிட்டுகள், நெட்வொர்க்கிங் ஹார்டுவேர், 10TB ஸ்டோரேஜ், 5 நிலையான சர்வர்ஸ், UPS, செல்லுலார் மோடம்கள் மற்றும் சிம் கார்டு ஆகியவை பெகாசஸ் செயல்பட தேவைப்படும் குறைந்தபட்ச கணினி உள்கட்டமைப்பு ஆகும்.

Views: - 149

0

0