செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர்! வரலாற்று சாதனைப் படைத்த நாசா | Perseverance Ingenuity Helicopter

19 April 2021, 6:19 pm
NASA celebrates ‘Wright brothers moment’ as Mars Ingenuity helicopter takes flight
Quick Share

செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதே பல நாடுகளுக்கும் கனவாக இருந்து வரும் வேலையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சமீபத்தில் தான் ‘பெர்சவரன்ஸ் ரோவர்’ எனும் வானூர்தியை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருந்தது.

இந்த பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா இல்லையா, மனிதர்கள் வாழ நீர் வளம் இருக்கிறதா, மனிதர்கள் வாழ ஏற்ற இடமாக இருக்குமா என்பது குறித்து எல்லாம் ஆய்வுகளைச் செய்து வருகிறது. 

இப்போது, அந்த சாதனையைத் தொடர்ந்து மற்றுமொரு வரலாற்று சாதனையையும் நிகழ்த்தி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இப்போது நாசா நிகழ்த்தியுள்ள புதிய சாதனை யாதெனில், பெர்சவரன்ஸ் ரோவர் எனும் வானூர்தியைச் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும்போதே அதனுடன் “இன்ஜெனுயிட்டி” என்று பெயரிடப்பட்ட ஹெலிகாப்டரையும் நாசா அனுப்பி இருந்தது. 

இந்த ஹெலிகாப்டர் மூலம் சிவப்பு கிரகத்தின் மேற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள  நாசா திட்டமிட்டிருந்தது. முதலில், இந்த  இன்ஜெனுயிட்டி ஹெலிகாப்டர் ஏப்ரல் 11 அன்று  முதல் முறையாக பறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மென்பொருள் சிக்கல்கள் ஏற்பட்டதால், இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, தொழிற்நுட்ப கோளாறுகள் சீரமைக்கப்பட்டு, இன்று ஏப்ரல் 19 ஆம் தேதி இன்ஜெனுயிட்டி ஹெலிகாப்டர் முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் பறந்துள்ளதாக நாசா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதில் இன்ஜெனுயிட்டி ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் நாசா பகிர்ந்து தனது மகிழ்ச்சியையும் நீண்ட கால முயற்சிக்கு கிடைத்த வெற்றியையும் மக்களுடன் பகிர்ந்துக்கொண்டுள்ளது.

Views: - 302

2

0