26 லட்சம் ஏர்டெல் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் கசிவு! ஹேக்கர்கள் அட்டூழியம்

4 February 2021, 9:00 am
Personal Data Of 26 Lakh Airtel Users Leaked On Web, Company Rubbishes Claims
Quick Share

பயனர்களின் தரவைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூறி வந்தாலும், தரவு மீறல்கள் குறித்து நாம் அடிக்கடி கேட்டுக்கொண்டே தான் இருக்கிறோம். ஏர்டெல் நிறுவனமும் இப்போது இதே சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

இப்போது 26 லட்சம் ஏர்டெல் பயனர்களின் தரவு இணையத்தில் கசிந்துள்ளது. தரவு கசிவில் முகவரி எண்ணுடன் ஆதார் அட்டை எண் மற்றும் ஏர்டெல் பயனர்களின் பாலின விவரங்கள் போன்ற தனிப்பட்ட விவரங்கள் கசிந்துள்ளது. இந்த தகவல்கள் கசிந்துள்ளதை இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்முனைவோர் ராஜ்ஷேகர் ராஜஹாரியா கண்டறிந்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்தியா டுடே ஒரு வீடியோவைப் பார்த்ததாக கூறுகிறது, அதில் ஏர்டெல்லின் பாதுகாப்பு குழு மற்றும் ரெட் ராபிட் குழு (ஹேக்கர் குழு) இடையிலான அரட்டைகள் பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மறுபுறம், ஏர்டெல் ஒரு அறிக்கையை வெளியிட்டு, அத்தகைய மீறல் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும், 2021 ஜனவரியில் ஏர்டெல் பயனர்களின் விவரங்களை ஹேக்கர்கள் பதிவேற்றியுள்ளதாகவும், இப்போது அவர்கள் ஆபரேட்டரிடமிருந்து பணம் கேட்டு வருவதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. “ஹேக்கர்கள் ஏர்டெல் பாதுகாப்பு குழுக்களுடன் தொடர்பு கொண்டு, பின்னர் நிறுவனத்தை பிளாக்மெயில் செய்ய முயன்றனர் மற்றும் அதிலிருந்து பிட்காயின்களில் 3500 டாலர் பறிமுதல் செய்தனர்” என்றும் ராஜஹாரியா கூறியுள்ளார்.

முன்னதாக ஹேக்கர்கள் தரவை நீக்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்; இருப்பினும், இப்போது மற்றொரு இணைப்பில் இது கிடைக்கிறது. ஹேக்கர்கள் தரவை விற்க விரும்பினர், ஆனால் முடியவில்லை என்று அவர் கூறினார். இதனால்தான் ஹேக்கர்கள் தரவை இணையத்தில் லீக் செய்துள்ளனர். மேலும், தரவு மூன்றாம் தரப்பினர் வழியாக கசிந்துள்ளது, தொலைத் தொடர்பு ஆபரேட்டரிடமிருந்து அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக, ரிலையன்ஸ் ஜியோ இதேபோன்ற பிரச்சினையை 2017 இல் எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 25

0

0