புதிய பிலிப்ஸ் ​​ஏர் பியூரிஃபையர்களை அறிமுகம் | விலை, அம்சங்கள் & விவரங்கள்

22 October 2020, 7:08 pm
Philips has launched a new series of air purifiers for India as air purifiers continue to become a necessity these days.
Quick Share

இன்றைய காலகட்டத்தில் ஏர் பியூரிஃபையர்கள் அவசியமாகிவிட்டன, மேலும் பிலிப்ஸ் நிறுவனம் இப்போது நகர்ப்புற வீடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட காற்று சுத்திகரிப்பான்களை அறிமுகம் செய்துள்ளது. இது நியூ அர்பன் லிவிங் சீரிஸ் என்று அழைக்கப்படுகிறது.  நியூ அர்பன் லிவிங் சீரிஸ் தொடரின் விலை ரூ.17,500 முதல் தொடங்குகிறது.

நியூ அர்பன் லிவிங் சீரிஸ் காற்று சுத்திகரிப்பான்கள் சிறிய அளவிலிருந்து நடுத்தர படுக்கையறை மற்றும் வாழ்க்கை அறை பகுதி வரையிலான அறை அளவுகளுக்கு ஏற்றது, மேலும் அவை 3000i, 2000i மற்றும் 1000 ஆகிய மூன்று தொடர்களில் கிடைக்கும். இந்தத் தொடரில் 3000i மற்றும் 2000i ஆகியவை சுத்தமான இல்லத்திற்கான ஸ்மார்ட் சுத்திகரிப்பான்கள் உடன்  ஆப், அலெக்சா மற்றும் சிரி மூலம் கட்டுப்படுத்தக்கூடிய வசதியையும் கொண்டுள்ளது.

மாடல் விவரங்களைப் பொறுத்தவரை, புதிய பிலிப்ஸ் அர்பன் லிவிங் சீரிஸ் ஏர் பியூரிஃபையர் வரம்பு சீரிஸ் 1000 க்கு AC1758, சீரிஸ் 2000i க்கு AC2958 மற்றும் AC2959 மற்றும் சீரிஸ் 3000i க்கான AC3059 ஆகிய மாடல் எண்களைக் கொண்டுள்ளது.

புதிய தொடரில் ஏராசென்ஸ் மற்றும் வீடாஷீல்ட் நுண்ணறிவு சுத்திகரிப்பு அமைப்பு தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது, பிலிப்ஸ் நிறுவனத்தின் தகவலின் படி 99.97% உட்புற காற்று மாசுபடுத்திகளை 0.003 மைக்ரான் வரை நீக்குகிறது.

மேலும், புதிய தொடர் காற்று சுத்திகரிப்பான்கள் PM2.5, புகை, தூசி, மகரந்த ஒவ்வாமை, பாக்டீரியாவுக்கு எதிராக மட்டுமல்லாமல், 99.9% வைரஸ்களையும் காற்றில் இருந்து அகற்றும் திறன் கொண்டது.

தொடர் 3000i இல், மணிக்கு 400 m3 சுத்தமான காற்று விநியோக வீதம், தொடர் 2000 இல் மணிக்கு 330 m3 சுத்தமான காற்று விநியோக வீதம் மற்றும் தொடர் 1000 இல் மணிக்கு 300 m3 சுத்தமான காற்று விநியோக வீதத்தைக் கொண்டுள்ளது. ஒரு பட்டனின் ஒரே கிளிக்கில் ஏர் பியூரிஃபையரின் நிலையையும் நீங்கள் சரிபார்ப்பதற்கான வசதியும் உள்ளது.

Views: - 42

0

0