PM கிசான் திட்டத்தின் 8 ஆம் தவணை நிதி உங்களுக்கு வந்துவிட்டதா என்பதை தெரிந்துக்கொள்வது எப்படி?

14 May 2021, 9:06 am
pm kisan samman nidhi steps to check your name in beneficiaries list
Quick Share

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா எனும் திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 மூன்று தவணைகளாக ரூ.2,000 ஆக மானியமாக மத்திய அரசு வழங்கிவருகிறது. இந்த திட்டத்தின் படி, அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 வரை குறைந்தபட்ச வருமான ஆதரவாக கிடைக்கும். இந்த வருடாந்திர நிதி உதவி 2 ஹெக்டேர் வரை நிலம் கொண்ட விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 2018 டிசம்பரில் தொடங்கப்பட்டதிலிருந்து, விவசாயிகளுக்கு இதுவரை ஏழு தவணைகளை அரசாங்கம் வழங்கியுள்ளது.

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், இன்று 8 வது தவணையை வழங்குவதாக அறிவித்துள்ளது.

  • சரி, இந்த  திட்டத்தின் மூலம் கிடைக்கும் மானியம்  உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிட்டதா இல்லையா என்பதை சரிபார்க்க:
  • www.pmkisan.gov.in எனும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.
  • வலைத்தளத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள ‘Farmers Corner’ எனும் பிரிவில் உள்ள ‘Beneficiary Status’ எனும் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து தோன்றும் பக்கத்தில் பதிவு செய்யும்போது கொடுத்த ஆதார் எண், வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உள்ளிடவும். 
  • விவரங்களை  உள்ளிட்டதும் ‘Get Data’ எனும் விருப்பத்தைக் கிளிக் செய்தால் எல்லா பரிமாற்றங்களும் காண்பிக்கப்படும்.
  • 8 வது தவணை தொடர்பான தகவல்களையும் இங்கு காண முடியும்.

Views: - 244

0

0