e-RUPI சேவையை இன்று அறிமுகம் செய்கிறார் பிரதமர் மோடி | e-RUPI என்றால் என்ன? e-RUPI மூலம் என்ன பயன்?

Author: Dhivagar
2 August 2021, 12:08 pm
PM Modi to launch e-RUPI today
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4.30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் e-RUPI என்ற டிஜிட்டல் கட்டண சேவை தளத்தை அறிமுகம் செய்துவைக்க உள்ளார். நிதி சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த தளம், ஒவ்வொரு  பயனருக்கும் தனிப்பட்ட மற்றும் நோக்கம் சார்ந்த டிஜிட்டல் கட்டணத் தீர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

e-RUPI மூலம் பயனர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்:

1) e-RUPI என்பது பணமில்லாத மற்றும் தொடர்பற்ற டிஜிட்டல் கட்டண சேவையாகும்.

2) சேவை வழங்குநர்கள் மற்றும் பயனாளிகளை டிஜிட்டல் முறையில் இணைக்க e-RUPI உதவியாக இருக்கும்.

3) பல்வேறு நலத்திட்ட சேவைகளின் கசிவு இல்லாத விநியோகத்தை உறுதி செய்ய ஏற்றது.

4) இது ஒரு QR குறியீடு அல்லது SMS ஸ்ட்ரிங் அடிப்படையிலான இ-வவுச்சர் சேவையாகும், இது பயனாளிகளின் மொபைலுக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.

5) இந்த தடையற்ற ஒரு முறை பணம் செலுத்தும் சேவையைப் பயன்படுத்துபவர்கள் டெபிட்/ கிரெடிட் கார்டு, டிஜிட்டல் கட்டணப் பயன்பாடு அல்லது இணைய வங்கி அணுகல் இல்லாமல் வவுச்சரை REDEEM செய்ய  முடியும்.

6) சேவை வழங்குநர்கள் மற்றும் சேவை பயனாளிகளை டிஜிட்டல் முறையில் எந்தவொரு நேரடி அணுகலும் இல்லாமல் e-RUPI இணைக்கிறது.

7) பரிவர்த்தனை முடிந்த பின்னர் சேவை வழங்குநருக்கு பணம் செலுத்தப்பட்டதற்கான உறுதிப்படுத்தலையும் வழங்குகிறது.

8) இயற்கையாகேவ இது ப்ரீ-பெய்டு சேவை என்பதால், எந்தவொரு இடைத்தரகரின் ஈடுபாடும் இல்லாமல் சேவை வழங்குநர் சரியான நேரத்தில் பணம் செலுத்த இது உதவியாக இருக்கிறது.

9) வழக்கமான கொடுப்பனவுகளைத் தவிர, தாய் மற்றும் சேய் நலத்திட்டங்கள், காசநோய் ஒழிப்பு திட்டங்கள், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா ஆகியவற்றின் கீழ் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து உதவி, உர மானியம் போன்ற அரசு திட்டங்களின் கீழ் கிடைக்கும் சேவைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். 

10) இந்த டிஜிட்டல் வவுச்சர்களை தனியார் துறையினர் அவர்களின் ஊழியர் நலன் மற்றும் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கும் பயன்படுத்தலாம்.

Views: - 217

0

0