ரூ.2,000 விலைகுறைந்தது இந்த போக்கோ போன் | புதிய விலை & விவரங்கள் இங்கே

4 November 2020, 1:06 pm
Poco M2 Pro price drops by Rs 2,000
Quick Share

இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸின் In நோட் 1 மிக குறைந்த விலையில் இந்திய சந்தையில் அறிமுகமானதை அடுத்து, இந்திய சந்தையில் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது போல் தெரிகிறது. ஏனென்றால், போகோ M2 ப்ரோ போனின் விலை ரூ.12,999 யிலிருந்து ரூ.10,999 ஆக குறைந்துள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் இப்போது ரூ.2,000 தள்ளுபடி உடன் விற்கப்படும்.

போக்கோ M2 ப்ரோ விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே உடன் 2400 x 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் டிரிபிள் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் ஆதரிக்கப்படுகிறது. இது அட்ரினோ 618 GPU உடன் சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் 720G செயலி உடன் இயக்கப்படுகிறது. போகோ M2 ப்ரோ 6 ஜிபி ரேம் வரை 128 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது, இது மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கப்படலாம்.

போக்கோ M2 ப்ரோ 48 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் லென்ஸ், 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவற்றின் கலவையுடன் குவாட் கேமரா அமைப்பில் கிடைக்கிறது. முன்பக்கத்திற்கு, 16 மெகாபிக்சல் இன்-டிஸ்ப்ளே செல்பி ஷூட்டர் உள்ளது.

இது ஆண்ட்ராய்டு 10 இல் MIUI 11 உடன் இயங்குகிறது மற்றும் 4000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. போக்கோ M2 ப்ரோ 33W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

Views: - 35

0

0