64MP கேமரா, 7000mAh பேட்டரி என செம்ம அம்சங்களுடன் செப்டம்பரில் வெளியாகப்போகும் ஸ்மார்ட்போன்கள்

7 September 2020, 12:04 pm
Poco M2 to Infinix Note 7, smartphones launching in India this month
Quick Share

போக்கோ M2

போக்கோ M2 முழு HD+ டிஸ்ப்ளே இடம்பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது, மேலும் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 5,000 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. தொலைபேசி இரண்டு நாட்கள் நீடிக்கும் திறன் கொண்டது என்று போகோ பிராண்ட் கூறுகிறது. ஸ்மார்ட்போனில் மேலே வாட்டர் டிராப் நாட்ச் இருக்கும், மேலும் வண்ண விருப்பங்களில் ஒன்று நீல நிறமாக இருக்கும். போகோ M2 செப்டம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி M51

சாம்சங் கேலக்ஸி M51 அதன் முதல் தொலைபேசியாக 7,000 mAh பேட்டரி கொண்டதாக இருக்கும். ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும். இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 730G செயலி மூலம் இயக்கப்படும். கேலக்ஸி M51 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் சாம்சங் தெரிவித்துள்ளது. இது 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். கேலக்ஸி M51 செப்டம்பர் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும்.

இன்பினிக்ஸ் நோட் 7

இன்பினிக்ஸ் தனது நோட் 7 ஸ்மார்ட்போனை செப்டம்பர் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகமானது. இன்பினிக்ஸ் நோட் 7 போன் 6.95 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியா டெக் ஹீலியோ G70 செயலி, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. இது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட நான்கு பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் நோட் 7 5,000 mAh பேட்டரியையும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

Views: - 5

0

0