டைமன்சிட்டி 1100 சிப்செட், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற தரமான அம்சங்களோடு POCO X3 GT | விவரங்கள் இங்கே

Author: Dhivagar
29 July 2021, 10:28 am
POCO X3 GT, with Dimensity 1100 processor, 67W fast-charging, launched
Quick Share

போகோ பிராண்ட் X3 GT என்ற மாடலை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

$299 (தோராயமாக ரூ. 22,240) முதல் விலைகள் ஆரம்பம் ஆகும் இந்த ஸ்மார்ட்போன் முழு HD+ டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமராக்கள், மீடியா டெக் டைமன்சிட்டி 1100 சிப்செட் மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவற்றை  கொண்டுள்ளது.

இது மே மாதம் சீனாவில் அறிமுகமான ரெட்மி நோட் 10 புரோ 5ஜி மாடலின் மறுவடிவமைக்கப்பட்ட பதிப்பாக அறிமுகம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

POCO X3 GT ஒரு பஞ்ச்-ஹோல் வடிவமைப்புடன் ஒரு குறிப்பிடத்தக்க கீழ்புற பெசல் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. பின்புறத்தில், இது மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த கைபேசியில் 6.6 இன்ச் ஃபுல்-HD+ (1080×2400 பிக்சல்கள்) IPS LCD திரை உடன் 120Hz புதுப்பிப்பு வீதம், HDR 10 ஆதரவு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது வேவ் ப்ளூ, ஸ்டார்கேஸ் பிளாக் மற்றும் கிளவுட் ஒயிட் வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.

POCO X3 GT இல் 64MP (f / 1.8) முதன்மை சென்சார், 8MP (f / 2.2) அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP (f / 2.4) மேக்ரோ ஸ்னாப்பர் ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்கு, இது 16MP (f / 2.5) முன் எதிர்கொள்ளும் கேமராவைக் கொண்டுள்ளது.

POCO X3 GT மீடியா டெக் டைமன்சிட்டி 1100 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹூட்டின் கீழ், இது ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான MIUI 12.5 இல் இயங்குகிறது மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இணைப்பிற்காக, இந்த சாதனம் வைஃபை 6, புளூடூத் 5.2, GPS, NFC, 5ஜி மற்றும் டைப்-C போர்ட் ஆகியவற்றிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது.

POCO X3 GT 8GB / 128GB மாடலுக்கு $299 (சுமார் ரூ.22,250) விலையும் மற்றும் 8GB / 256GB மாடலுக்கு $329 (தோராயமாக ரூ.25,000) விலையும்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் கிடைக்கும். இந்தியாவில் இது கிடைப்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Views: - 188

0

0