போகோ X3 ப்ரோ: முதல் முறையாக விற்பனை! விலையுடன் விவரங்கள் இதோ

6 April 2021, 10:17 am
Poco X3 Pro to go on sale today in India
Quick Share

போகோ X3 புரோ இன்று இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. போகோ X3 ப்ரோ 120 Hz டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 செயலி மற்றும் 5,160 mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் வெளியானது.

இதன் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. போகோ X3 ப்ரோ 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் அடிப்படை மாடலுக்கு ரூ.18,999 விலையில் விற்பனைச் செய்யப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட்போன் போகோ X3 ப்ரோவின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டிலும் கிடைக்கிறது, இதன் விலை ரூ.20,999 ஆகும். தொலைபேசி கோல்டன் பிரான்ஸ், கிராஃபைட் பிளாக் மற்றும் ஸ்டீல் ப்ளூ ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

போகோ F1 ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது, ரூ.7,000 வரை தள்ளுபடி கிடைக்கும். போகோ X3 ப்ரோவின் அடிப்படை மாடல் ரூ.7,000 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.10,999 விலையில் வாங்கலாம். போக்கோ X3 ப்ரோவின் 8 ஜிபி வேரியண்ட்டும் இதே சலுகையுடன் ரூ.12,999 விலையில் கிடைக்கும்.

விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, போக்கோ X3 ப்ரோ 6.67 இன்ச் டிஸ்ப்ளே முழு HD+ ரெசல்யூஷன், 120 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 240 Hz டச் சேம்ப்ளிங் ரேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பும் உள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 செயலி உடன் இயக்கப்படுகிறது. சிறந்த வெப்ப செயல்திறனுக்காக இது லிக்விட் கூல் டெக்னாலஜி பிளஸையும் கொண்டுள்ளது.

போகோ X3 ப்ரோ பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது 20 மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

மென்பொருள் முன்னணியில், இது ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட போகோ லாஞ்சர் 2.0 உடன் MIUI 12 இல் இயங்குகிறது. இது 5,160mAh பேட்டரியை 33W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் கொண்டுள்ளது.

Views: - 0

0

0

Leave a Reply