ரூ.1399 அறிமுகம் விலையில் புதிய போர்ட்ரானிக்ஸ் புளூடூத் ஸ்பீக்கர்கள் இந்தியாவில் அறிமுகம் | விவரங்கள் இங்கே

16 June 2021, 12:09 pm
Portronics SoundDrum 1 Bluetooth speakers launched in India
Quick Share

சவுண்ட் டிரம் 1 போர்ட்டபிள் புளூடூத் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்துவதாக போர்ட்ரானிக்ஸ் அறிவித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் வயர்லெஸ் ஸ்பீக்கர் 10W சக்திவாய்ந்த ஆடியோ உடன் மேம்பட்ட இசை அனுபவத்தை வழங்குகிறது. தொற்றுநோய் பரவ தொடங்கியதிலிருந்து, நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் ஹவுஸ் பார்ட்டிகளை நடத்துவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற சமயத்தில் ஆடியோ பிரிவில் புளூடூத் ஸ்பீக்கர்கள், வயர்லெஸ் ஆடியோ சாதனங்கள் குறிப்பிடத்தக்க ஈர்ப்பைப் பெற்றுள்ளன.

போர்ட்ரானிக்ஸ் சவுண்ட்டிரம் 1 புளூடூத் ஸ்பீக்கர்  ஒரு ஸ்டைலான மற்றும் நேர்த்தியான தோற்றத்தையும் மற்றும் ரப்பர் மேட் ஃபினிஷ் உடன் வருகிறது. இந்த சாதனம் சிறியதாகவும் மற்றும் குறிப்பாக கைக்கு அடக்கமாகவும் இருக்கும் சிறந்த அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. போர்ட்டபிள் புளூடூத் ஸ்பீக்கர் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ அம்சத்தையும் கொண்டுள்ளது, இதைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் இரண்டு ஸ்பீக்கர்களுடன் இணைக்க முடியும். 

போர்ட்ரானிக்ஸ் சவுண்ட்டிரம் 1 புளூடூத் ஸ்பீக்கர் 2,000 mAh பேட்டரி திறன் கொண்டது, இது 60% முதல் 70% வரை பயன்படுத்தினால் 8 முதல் 10 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. பணிபுரியும் நிபுணர்களுக்கு, இது ஒரு ஸ்பீக்கர்ஃபோனாகவும் செயல்படுகிறது. அழைப்பின் போது, ​​சாதனம் மூலம் அழைப்பு இணைக்கப்பட்டுள்ளதைக் குறிக்க மைக்ரோஃபோன் நிலை அடையாளம் தெளிவாகத் தோன்றும்.

விலையைப் பொறுத்தவரை, போர்ட்ரானிக்ஸ் சவுண்ட்டிரம் 1 அமேசானில் பிரத்தியேகமாக 1 ஆண்டு உத்தரவாதத்துடன் ரூ.1,399 விலையில் கிடைக்கிறது.

Views: - 190

1

0