200 ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல்!

1 May 2021, 5:33 pm
Prepaid recharge plans under 200 rupees
Quick Share

200 ரூபாய்க்கும் குறைவான விலையில் அழைப்பு மற்றும் டேட்டா என இரண்டுமே கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களை நீங்கள் பெற விரும்பினால், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே இரண்டு சிறந்த திட்டங்களை வழங்குகின்றன.

இரண்டு ஆபரேட்டர்களும் பயனர்களுக்கான பல திட்டங்களையும் சலுகைகளையும் அறிமுகம் செய்துள்ளனர். ஜியோவின் ரூ.149 மற்றும் ரூ.199 திட்டங்கள் 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கும்.

ஜியோவின் ரூ.149 திட்டம் வரம்பற்ற அழைப்பு, தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. ஜியோவின் இந்த திட்டத்திற்கு 24 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

ஜியோவின் 199 திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இது வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் Jio பயன்பாடுகளுக்கான சந்தாவைப் பெறுவீர்கள்.

ஏர்டெல் 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் பல வகையான ப்ரீபெய்ட் திட்டங்களை உங்களுக்கு வழங்குகிறது. ஏர்டெல் ரூ.19, ரூ.129, ரூ.149, ரூ.179, ரூ.199 விலைகளில் 5 திட்டங்களை வழங்குகிறது.

இதில் மலிவான திட்டம் 19 ரூபாய் விலையிலானதுதான். இதில் 200 MP டேட்டா 2 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர, 129 ரூபாய் திட்டத்தில் 1 ஜிபி டேட்டா 24 நாட்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவையும் கிடைக்கும். ரூ.149 திட்டத்தில் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை 28 நாட்களுக்கு கிடைக்கும்.

ஏர்டெல்லின் 179 திட்டம்- வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. ரூ.179 விலையில், பயனர்கள் பாரதி ஆக்சா ஆயுள் காப்பீட்டிலிருந்து ரூ.2 லட்சம் காப்பீடு பெறுவார்கள். அதே நேரத்தில், நிறுவனத்தின் ரூ.199 திட்டம் 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.

Views: - 250

0

0