தீவிர PUBG வெறியர்களுக்கு ஒரு துக்கமான செய்தி…! புலம்பி தள்ளும் PUBG வெறியர்கள்

27 September 2020, 8:05 pm
PUBG ban not likely to be revoked anytime soon
Quick Share

சில நாட்களுக்கு முன்பு தான் சீன நிறுவனமான டென்சென்ட் கேம்ஸ் உடன்  தொடர்பு கொண்டிருப்பதன் காரணமாக இந்திய தொழில்நுட்ப அமைச்சகம் PUBG செயலியை இந்தியாவில் தடை செய்தது. 

இந்த தடையின் காரணமாக, PUBG கார்பரேஷன் நிறுவனம் இந்தியாவில் டென்சென்ட் கேம்ஸ் உடனான உறவையும் முடித்துக் கொண்டது.

இந்தியாவில் டென்செண்ட் நிறுவனத்துடன் PUBG கார்ப் தனது இணைப்பு முடித்துக்கொண்டதும் சமீபத்திய தடை உத்தரவு பின்வாங்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திந்தனர். ஆனால், அவர்கள் தலையில் இடியைத் தூக்கிப்போடும் வகையில் ஒரு புதிய அறிக்கை அவ்வாறு எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் நுழைய, ரிலையன்ஸ் ஜியோ உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால், அரசின்  உத்தரவை மீறி அது நடக்குமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Views: - 1

0

0