PUBG செயலிக்கு இறுதிச்சடங்கு! கதறும் PUBG வெறியர்கள்! வரவேற்கும் நலம் விரும்பிகள்! இணையத்தில் கலகலப்பு!

2 September 2020, 6:57 pm
PUbg banned in India fun on internet
Quick Share

சீன் போடும் நண்டு-சிண்டுகள்

இந்த ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் குறைவான விலையில் கிடைக்கத் தொடங்கியது தான்  தாமதம், நோக்கியா பட்டன் போனில் ஸ்னேக் கேம் கிரிக்கெட் கேம் விளையாடிக் கொண்டிருந்த நண்டு சிண்டுகள் எல்லாம் திடீரென ஆளுக்கொரு ஸ்மார்ட்போனைக் கையில் வைத்துக்கொண்டு நானும் பெரிய கேமர் தான் என்று Candy Crush இல் ஆரம்பித்து Clash of Clans, Mini Miltia, Call of Duty, PUBG வரை இன்னும் பல பெயரே தெரியாத பல கேம் ஆப்களை பிளே ஸ்டோரில் ஸ்டோரில் டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டு அவர்கள் செய்த அழிச்சாட்டியம் இருக்கே அப்பப்பா.. சொல்லி முடியாது!

செல்லும் இடமெல்லாம் PUBG

முதலில் இந்த Candy Crush கேம் விளையாடும் போது கூட பரவாயில்லை. இந்த இன்டர்நெட் வழியாக நண்பர்களுடன் பகிர்ந்து விளையாடும் கேமான PUBG வந்தாலும் வந்தது பள்ளிகள், கல்லூரிகள் முதல் அலுவலகங்கள், பஸ், மெட்ரோ ரயில்கள் வரை கூட்டம் கூட்டமாக சேர்ந்துக்கொண்டு செய்யவேண்டிய வேலைகளைச் செய்கிறார்களோ இல்லையோ, அவனைச் சுடு இவனைச் சுடு என்று ஆளுக்கொரு பக்கம் கூச்சல் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கும். போதா குறைக்கு இந்த மீம்ஸ் போடுபவர்களும், யூடியூப் வீடியோ கிரியேட்டர்களும் இவர்களுடன் சேர்ந்துக்கொண்டனர். 

இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 12 கோடி பேருக்கு மேலானோர் இந்த PUBG கேமை விளையாடி வந்தனர். மேலும் இந்த விளையாட்டு எப்போதுமே டாப் மூன்று பதிவிறக்கங்களில் ஒன்றாகவே இருந்து வந்தது. அவ்வளவு தீவிரமாக இந்த கேமை பல இளைஞர்கள் விளையாடி வந்தனர். 

PUBG இழப்புகள்

இந்த PUBG கேமால், இந்தியாவில் பல மாநிலங்களில் பல அசம்பாவிதங்களும், நஷ்டங்களும் ஏற்பட்டுள்ளது. விளையாடுவதற்குப் பதிலாக படிக்கச் சொன்னதால் தெலுங்கானாவில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது முதல் PUBG கேமில் சில கேமிங் உபகரணங்களை வாங்க தந்தையின் சேமிப்பு பணத்தில் 17 லட்சத்தைச் செலவு செய்த பஞ்சாப் சிறுவன் வரை இந்த PUBG கேமரால் நிகழ்ந்த இழப்புகள் ஏராளம். 

PUBG தடை

காள்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த இந்திய சீன எல்லைப் பிரச்சினைகள் காரணமாகவும், தனியுரிமை சிக்கல்கள், பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாகவும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒவ்வொரு கட்டமாக சீன செயலிகளைத் தடைச் செய்து வரும் வேளையில், சீன நிறுவனமான Tencent Games இடமிருந்து 10% பங்கைக் கொண்டிருக்கும் PUBG மொபைல் கேமையும் அதோடு சேர்த்து 118 செயலியையும் இப்போது தடை செய்துள்ளது.

PUBG தடைக்கு வரவேற்பு!

என்னதான், தீவிர PUBG வெறியர்கள், PUBG கேமை லைவ் ஸ்ட்ரீமிங் செய்து சம்பாதித்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் இந்த PUBG தடைக்காக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கதறிக்கொண்டிருந்தாலும், நாட்டின் நலம் விரும்பிகளும், மற்றொரு சாராரும் இந்த முடிவை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். 

ஏனென்றால், இந்த PUBG மற்றும் பல கேமை விளையாடிய பல சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் “Internet Gaming Disorder” என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டதாக ஆய்வறிக்கைக் கூறுகிறது. உடல்நல குறைபாடு, மனநல குறைபாடு, சமூக உறவு துண்டிப்பு, தூக்கமின்மை, படிப்பில் நாட்டமின்மை போன்ற பிரச்சினையையும் இவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்தது, சொல்லப்போனால் இன்னும் பல கேம்கள் இருப்பதால் எதிர்கொள்ளவேண்டியும் உள்ளது.

தடைக்கு வரவேற்பு

இந்த PUBG தடையால் இது போன்ற பிரச்சினைகள் எல்லாம் இனிமேலாவது இல்லாமல் இருக்கும் என்று பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட தீவிர கேமர்களின் நலம் விரும்பிகள் அனைவரும் இந்த தடை நடவடிக்கையை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.

Views: - 0

0

0