தில்லு வாலே புச்சு தேனே கியா…..! சோனமுத்தா போச்சா!! ஒப்பாரி வைக்கும் PUBG கேமர்கள்

3 September 2020, 11:58 am
pubg banned in India Players Go crazy on social media
Quick Share

90’ஸ் கிட்ஸ் ல இருந்து 2K கிட்ஸ் வரைக்கும் இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 15 கோடிக்கு மேலான பல பேருக்கு இன்னிக்கு தலையில இடி விழுந்த மாதிரி ஒரு செய்தி வந்திருக்குனா அது PUBG கேமை பேன் பண்ணினதுதாங்க. 

இந்தியா சீனா எல்லையில நடந்த பிரச்சினை நமக்கு தெரியும். அந்த சம்பவம் நடந்த அப்புறம் நம்ம தொழில்நுட்ப அமைச்சகம் சீன செயலி சீன நிறுவனங்களோட தொடர்புள்ள நிறுவனங்களோட செயலினு சும்மா சுத்தி  சுத்தி பாதுகாப்பு பிரச்சினை சொல்லி தடை பண்ணிகிட்டே இருக்காங்க.

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 177 செயலிக்கும் மேல தடை பன்னிட்டாங்க. டிக்டாக் மாதிரியான ஆப் எல்லாம் தடை செய்யுறப்போ, டேய் இது சீனா ஆப் எல்லாம் கிடையாது, சிங்கிள்ஸ்கான ஆப் அப்படி இப்படினு சொல்லிட்டு நண்டு சிண்டுகள் எல்லாம் பில்ட் அப் சுத்திட்டு இருந்தாங்க. கடைசில  நான் பாட்டுக்கு சிவனேன்னு தானடா போயிட்டு இருந்தேன்னு சொல்லுற அளவுக்கு பில்ட் அப் பண்ணதுல PUBG க்கே ஒரு பெரிய ஆப்பா வச்சிட்டாங்க நம்ம தொழில்நுட்ப அமைச்சகம்.

ஆமாங்க, டிக்டாக், ஹலோ ஆப் வரிசையில இப்போ இந்த PUBG, LUDO ஆப்னு மொத்தமா 118 ஆப்கள் தடைனு சொன்னதுல இருந்து பேஸ்புக், ட்விட்டர், யூடியூப்னு ஒரு கூட்டமே மீம்ஸ் போட்டு, வீடியோ போட்டு கதறிக்கிட்டு இருக்குங்க.

யாருய்யா இந்த கூட்டம் திடீர்னு அப்படினு பாத்தா வெறித்தனமா தூங்கறது கூட விட்டுட்டு சாப்பிடாம கொள்ளாம Attack Attack அவனைச் சுடு இவனைச் சுடு சொல்லிக்கிட்டு PUBG விளையாண்டுக்கிட்டு இருந்த சிறுசுல இருந்து பெருசு வரைக்கும் எல்லாம் இன்னைக்கு ஒப்பாரி வச்சிக்கிட்டு இருகாங்க.

ஆனா, இதெல்லாம் பாத்துட்டு சந்தோசப்படுறதுக்கும் ஒரு கூட்டம் இருக்குங்க. நாட்டு மேல நேசம்  இருக்குற ஒரு கூட்டம் இருந்தாலும் இந்த தடையால சந்தோச படுற இன்னொரு கூட்டம் எதுன்னு  உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். ஆமாங்க, இந்த லாக்டவுன் இவ்ளோ நாளா வீட்டுல இருக்க பசங்கள படி படி ஏதாச்சும் உருப்படியா பண்ணு பண்ணுனு சொல்லி சலிச்சுபோன பெற்றோர்கள் கூட்டம் தாங்க. ஹப்பா….. இன்னிக்கி அவங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம்.

ஆனா, எங்களுக்காடா end card போடுறீங்க எங்களுக்கு எண்டே கிடையாதுன்னு Call of Duty, ShadowGun Legends, Battle Prime னு இந்த PUBG கூட்டம் அப்படியே திரும்ப தயாராகிடுச்சு.

Views: - 5

0

0