ரிலையன்ஸ் ஜியோ உடன் மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் PUBG கார்ப்பரேஷன்! இந்தியாவில் நுழைய துடிக்கும் PUBG..!

25 September 2020, 8:46 pm
PUBG Corporation in talks with Reliance Jio to bring back PUBG Mobile to India
Quick Share

பிரபலமான மொபைல் கேம் ஆன PlayerUnknown’s Battlegrounds (PUBG) கேமிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட பின்னர், இந்த கேமை உருவாக்கிய தென் கொரிய நிறுவனம், இந்தியாவின் கேமிங் நிறுவனத்துடன் கூட்டாளராக முயற்சித்து வருகிறது. ஊடக அறிக்கைகளின்படி, PUBG இந்திய கேமிங் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறது. PUBG கார்ப் என்பது தென் கொரியா நிறுவனமான புளூஹோல் கேம்ஸின் ஒரு பிரிவு ஆகும்.

இந்தியாவின் மிகப்பெரிய கேமிங் நிறுவனங்களில் ஒன்றான Paytm First Games ஏற்கனவே PUBG கேமின் போட்டி விளையாட்டான கரீனா ஃப்ரீஃபைருடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறது. இதற்கிடையில், ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் PUBG உரிமத்தைப் பெறக்கூடும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. ரிலையன்ஸ் ஜியோவுடன் தென் கொரிய நிறுவனம் வருவாய் பங்கு மற்றும் உள்ளூர்மயமாக்கல் குறித்து விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரங்களின்படி, இந்தியாவில் டென்செண்ட் உடனான உறவை முறித்துக் கொண்ட பின்னர், PUBG இந்தியாவில் தன்னை நிலைநிறுத்த ஒரு இந்திய கூட்டாளரை எதிர்பார்க்கிறது. பிரபலமான விளையாட்டு இந்தியாவில் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி கேமிங் பிரிவில் கவனம் செலுத்த தொடங்குவாரா? PUBG உடன் ரிலையன்ஸ் கூட்டணி அமைக்குமா என்பதை எல்லாம் அறிந்துக்கொள்ள Updatenews360 உடன் இணைந்திருங்கள்.