மீண்டும் இந்தியாவில் PUBG மொபைல் கேம் வர அதிக வாய்ப்புகள்! PUBG திடீர் அறிவிப்பு! இது தான் காரணமா?

8 September 2020, 1:17 pm
PUBG breaks ties with China-based Tencent for India operations
Quick Share

இந்தியாவில் PUBG மொபைல் தடைசெய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் டென்சென்ட் கேம்ஸ் உடன் PUBG மொபைல் எந்தவொரு தொழில்ரீதியான உறவையும் வைத்திருக்காது என்று கொரிய நிறுவனமான PUBG கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. 

இந்த வார தொடக்கத்தில், இந்திய அரசு PUBG மொபைல் உள்ளிட்ட 117 சீன பயன்பாடுகளை தடை செய்வதாக அறிவித்தது. பயன்பாடுகள் “இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு பாதகம் விளைவிக்கக்கூடியது” என்று அரசாங்கம் குற்றம் சாட்டியது.

இதையடுத்து, PUBG கார்ப்பரேஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், சமீபத்திய இந்திய அரசாங்க நடவடிக்கைகளுக்கு மதிப்பளித்து, PUBG மொபைல் இனி இந்தியாவில் சீனாவின் டென்சென்ட் கேம்ஸ் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படாது என்றும் தென் கொரிய நிறுவனமான PUBG கார்ப்பரேஷன் அனைத்து துணை நிறுவனங்களின் முழு பொறுப்பையும் ஏற்கும் என்றும் அறிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கையில் PUBG மொபைல் கேமுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் நீக்கப்படும் என்பது தெரிகிறது.

இப்போது, ​​PUBG மொபைல் இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்தாலும், தங்கள்  போனில் PUBG கேமை இன்னும் இன்ஸ்டால் செய்து வைத்திருக்கும் பயனர்களுக்கு கிடைக்கிறது. ஏனென்றால், PUBG மொபைல் என்பது PUBG கேம்ஸ் என்பதின் மொபைல் பதிப்பாகும், இது முதலில் தென் கொரிய கேமிங் நிறுவனமான PUBG கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்டது. இருப்பினும், சீன நிறுவனமான டென்சென்ட் கேம்ஸ் ப்ளூஹோல் ஸ்டுடியோவில் 1.5% பங்குகளை வாங்கியதால் PUBG மொபைல் கேமும் சீன செயலியாக கருதப்பட்டு தடைச் செய்யப்பட்டது. இது சீனாவுடனான தொடர்பு காரணமாக இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட பதிப்பாகும், ஆனால் மொபைல் கேமிங் பயன்பாட்டின் PC பதிப்பு தடைச்செய்யப்படவில்லை. பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து நீக்கப்பட்டாலும், இணைய சேவை வழங்குநர்களும் PUBG மொபைல் கேமிற்கான சேவையை ரத்துச் செய்யவில்லை.

இந்தியாவில் டிக்டாக் மற்றும் பிற 58 பயன்பாடுகளை அரசாங்கம் முன்பு தடை செய்தது நமக்கு தெரியும். அச்சமயத்தில், பயன்பாடுகள் முதலில் பயன்பாட்டுக் கடைகளிலிருந்து அகற்றப்பட்டு பின்னர் இணைய சேவை வழங்குநர்களாலும் தடைச் செய்யப்பட்டன. முதலில் மக்கள் டிக்டாக்கை ஆரம்பத்தில் பதிவிறக்கம் செய்ய முடியாமல் போனது, பின்னர் ஏற்கனவே பயன்பாட்டைக் கொண்டிருந்த பயனர்களும் சேவையகங்களால் தடுக்கப்பட்ட பின்னர் பயன்பாட்டைப் பயன்படுத்த முடியாமல் போனது. டிக்டாக்கைத் தவிர, ஷேரிட், கேம்ஸ்கேனர், யுசி உலாவி உள்ளிட்ட பிரபலமான பயன்பாடுகளும் இந்தியாவில் இதே போல் தடைச் செய்யப்பட்டது.

இது போன்ற தடைகள் PUBG கேமிற்கு விதிக்கப்படாததால், PUBG கேம் மீண்டும் இந்தியாவிற்கு வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிகிறது.

Views: - 14

0

0