PUBG Mobile India பெயரில் மீண்டும் இந்தியாவில் நுழைகிறது PUBG! கொண்டாட்டத்தில் PUBG வெறியர்கள்!

12 November 2020, 4:20 pm
PUBG Mobile Announces Return to India with $100 Million Investment
Quick Share

PUBG மொபைல் இந்தியாவில் மீண்டும் இந்தியாவில் வருமா வராதா என்று தடைச் செய்யப்பட்ட நாளிலிருந்தே வதந்திகள் வந்துக்கொண்டே தான் இருந்தது. ஆனால், வதந்திகளுக்கு எல்லாம் ஓய்வு அளித்துள்ளது PUBG கார்ப்பரேஷன். இந்திய சந்தைக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட PUBG MOBILE INDIA கேமை தொடங்க தயாராகி வருவதாக PUBG Corp இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லோக்கல் வீடியோ கேம், இ-ஸ்போர்ட்ஸ், பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பத் தொழில்களை வளர்ப்பதற்கான முதலீடுகளுடன் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான விளையாட்டு சூழலை வழங்குவதற்கான திட்டங்களையும் நிறுவனம் அறிவித்துள்ளது.

விளையாட்டாளர்களுடனான தகவல் தொடர்பு மற்றும் சேவைகளை மேம்படுத்த இந்திய துணை நிறுவனத்தை உருவாக்கும் திட்டத்தையும் PUBG கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. வணிக, ஸ்போர்ட்ஸ் மற்றும் விளையாட்டு மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற்ற 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களை இந்திய நிறுவனம் பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

உள்ளூர் அலுவலகத்தை நிறுவுவதோடு மட்டுமல்லாமல், அதன் கேமிங் சேவையை வலுப்படுத்த உள்ளூர் வணிகங்களை தீவிரமாக ஒத்துழைக்கவும் நிறுவனம் முயற்சிக்கும்.

பாதுகாப்பை வலுப்படுத்தவும் பயனர்களின் தரவுகளைப் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்யவும் இந்திய பயனர்களை தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய சேமிப்பக அமைப்புகளில் வழக்கமான தணிக்கை மற்றும் சரிபார்ப்புகளை நடத்தும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில், விளையாடுபவர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு நிறுவனம் அதிக முன்னுரிமை அளிக்கிறது.

ஆரோக்கியமான விளையாட்டு சூழலை உருவாக்குவதற்கும் வளர்ப்பதற்கும், உள்ளூர் தேவைகளை பிரதிபலிக்கும் வகையில் விளையாட்டு உள்ளடக்கம் மேம்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டின் பல்வேறு அம்சங்கள் இந்திய விளையாட்டாளர்களுக்காக தனிப்பயனாக்கப்படும், அதாவது விளையாட்டு இப்போது மெய்நிகர் உருவகப்படுத்துதல் பயிற்சி மைதானத்தில் (virtual simulation training ground) அமைக்கப்பட்டுள்ளது, புதிய கதாபாத்திரங்கள் தானாகவே ஆடை அணிவது, மற்றும் விளையாட்டின் மெய்நிகர் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் கிரீன் ஹிட் எஃபெக்ட்ஸ் போன்ற  அம்சங்கள் இருக்கும்.

மிக முக்கியமாக, இளைய விளையாட்டாளர்களுக்கு ஆரோக்கியமான விளையாட்டுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு நேரத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் ஒரு அம்சத்தையும் நிறுவனம் கொண்டுவரப்போகிறது.

அதன் தாய் நிறுவனமான KRAFTON, Inc. உடன், PUBG கார்ப்பரேஷன் லோக்கல் வீடியோ கேம், இ-ஸ்போர்ட்ஸ், பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பத் தொழில்களை வளர்ப்பதற்காக இந்தியாவில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகளை அதாவது சுமார் ரூ.746 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

PUBG மொபைல் இந்தியா கேமுக்கான வெளியீட்டு தேதி பின்னர் பகிரப்படும்.

இந்த செய்தியை அறிந்ததும் இந்தியா முழுவதும் உள்ள PUBG வெறியர்கள் கொண்டாட துவங்கியுள்ளனர். 

Views: - 29

0

0