திடீரென தோன்றி மறைந்த PUBG மொபைல் இந்தியா கேம் லிங்க்…..ரசிகர்கள் ஏமாற்றம்!

21 November 2020, 1:16 pm
PUBG Mobile India APK Download Link Appears on Official Website | Check Details
Quick Share

PUBG மொபைல் இந்தியா கேமின் வெளியீடு மிக விரைவில் நிகழவுள்ளது, விளையாட்டைப் பதிவிறக்குவதற்கான APK இணைப்பு நாட்டின் சில பயனர்களுக்கு சிறிது நேரம் தோன்றியுள்ளது. 

PUBG மொபைல் இந்தியா விளையாட்டின் APK ஃபைல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சிறிது நேரம் கிடைத்ததாக பல PUBG மொபைல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். PUBG வலைத்தளம் இரண்டு விருப்பங்களைக் காண்பித்துள்ளது, ஒன்று விளையாட்டின் கூகிள் பிளே ஸ்டோர் பட்டியலுக்கானது, இரண்டாவது கேமை நேடியாக பதிவிறக்குவதற்கான APK இணைப்பு.

ஆனால், இந்த இணைப்புகள் சிறிது நேரத்தில் காணாமல் போனது. இதனால் PUBG ரசிகர்கள் மிகவும் கவலையடைந்தனர்.

PUBG மொபைல் தடை செய்யப்பட்டதிலிருந்து, PUBG Mobile இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் இந்திய அரசு தடுத்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பல சீன பயன்பாடுகளுடன் போர் ராயல் விளையாட்டு தடைசெய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட சீன பயன்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிப்பவை என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது.

சமீபத்தில், PUBG மொபைலின் பெற்றோர் நிறுவனமான KRAFTON மைக்ரோசாப்ட் அஸூருடன் PUBG கேம்களை நடத்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. PUBG Mobile India இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போது, ​​இந்திய வீரர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பே அதன் முன்னுரிமை என்றும் நிறுவனம் கூறியிருந்தது.

PUBG மொபைல் இந்தியா விளையாட்டு இந்திய வீரர்களின் தேவைகள் மற்றும் அரசாங்கத்தின் விதிகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு PUBG மொபைலின் உலகளாவிய பதிப்போடு ஒற்றுமையைக் கொண்டிருக்கும், ஆனால் சில மாற்றங்களும் இருக்கும். 

PUBG கார்ப் PUBG மொபைல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை இன்னும் வெளியிடவில்லை, ஆனால் எண்ணற்ற டீஸர்களைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், இந்த கேம் விரைவில் மீண்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது, அநேகமாக அடுத்த மாதத்தில் வெளியாகும். 

இதற்கிடையில், nCore கேம்ஸ் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட FAU-G கேமை இந்த மாத இறுதியில் இந்தியாவில் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Views: - 21

0

0