ஏர்டெல் உதவியுடன் இந்தியாவில் மீண்டும் நுழைகிறதா PUBG?

Author: Dhivagar
7 October 2020, 5:01 pm
PUBG Mobile is reportedly in talks with Airtel
Quick Share

செப்டம்பர் மாதத்தில் PUBG மொபைல் கேம் இந்தியாவில் மீண்டும் தடைசெய்யப்பட்டதால், PUBG கார்பொரேஷன் இந்த மொபைல் விளையாட்டை இந்திய விளையாட்டாளர்களுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறது. இந்த கேம் தற்போது ஒரு APK பைல் உதவியுடன் இந்தியாவில் வேலை செய்தாலும், பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் கிடைக்கவில்லை.

இப்போது, Entrackr அறிக்கையின்படி, PUBG மொபைல் தற்போது ஏர்டெலுடன் இணைந்து விளையாட்டின் வெளியீட்டு உரிமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும், அதே நேரத்தில் ஜியோவுடனான பேச்சுவார்த்தையில் எதுவும் முன்னேற்றம் இல்லை என்பதுவும் தெரியவந்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில், ரிலையன்ஸ் ஜியோ வெளியீட்டு உரிமையைப் பெறும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில் PUBG மீதான தடையை அரசாங்கம் அகற்ற இப்போதைக்கு வாய்ப்பில்லை என்ற தகவல்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கிடையேயான எல்லை பதட்டங்கள் காரணமாக PUBG மொபைல் கேம் மற்றும் சீனாவை தளமாகக் கொண்ட 117 பிற பயன்பாடுகளை இந்திய அரசு தடை செய்தது.

ஃப்ரீஃபயர், கால் ஆஃப் டூட்டி மொபைல், ஷேடோகன் லெஜண்ட்ஸ் போன்ற பல விளையாட்டுகள் இந்தியாவில் PUBG தடை செய்யப்பட்டதிலிருந்து பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. FAUG என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு விளையாட்டு மற்றும் இது nCore கேம்ஸ் நிறுவனத்தனால் விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. PUBG ஏர்டெலுடன் இணைந்து வெளியாகுமா? வெளியானால்  என்ன மாதிரியான  கட்டப்பாடுகள்  இருக்கும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Views: - 48

0

0