டைமன்சிட்டி 800U மற்றும் 48 MP குவாட் ரியர் கேமராவுடன் ரியல்மீ 7 5ஜி அறிமுகம் | விலை & விவரங்கள்

19 November 2020, 8:57 pm
Realme 7 5G announced with Dimensity 800U and 48MP quad rear camera
Quick Share

ரியல்மீ இன்று ஐரோப்பாவில் ரியல்மீ 7 5 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் சில மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மீ 7 இன் 5ஜி மாறுபாடு தான் இந்த தொலைபேசி ஆகும்.

ரியல்மீ 7 5 ஜி விலை

ரியல்மீ 7 5 ஜி 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒற்றை வேரியண்டிற்கு யூரோ 279 (சுமார் ரூ.24,600) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டிய ஆர்டர்கள் ஏற்கனவே துவங்கியுள்ளது மற்றும் நவம்பர் 27 ஆம் தேதி முதல் விநியோகம் தொடங்குகிறது. இது அமேசான் UK வழியாக GBP 229 (தோராயமாக ரூ.22,500) தள்ளுபடி விலையில் நவம்பர் 30 வரை Black Friday வின் சிறப்பு ஒப்பந்தத்தின் கீழ் விற்பனைக்கு வரும்.

ரியல்மீ 7 5G விவரக்குறிப்புகள்

ரியல்மீ 7 5 ஜி 6.5 இன்ச் முழு எச்டி + எல்சிடி டிஸ்ப்ளேவுடன் 2400 x 1080 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது.

ரியல்மீ 7 5 ஜி ஒரு குவாட்-கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல் முதன்மை லென்ஸ், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் 119 டிகிரி FoV, 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் B&W லென்ஸ் கொண்டுள்ளது. முன்பக்கத்திற்கு, 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாலி-G57 MC3 GPU உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 800U சிப்செட் உடன் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 10 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது, அதன் மேல் ரியல்மீ UI இயங்குகிறது. இது 30W டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5000 mAh பேட்டரியுடன் உள்ளது, இது பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 65 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

ரியல்மீ 7 5 ஜி யின் இணைப்பு அம்சங்களில் இரட்டை 4 ஜி VoLTE, வைஃபை 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும். தொலைபேசி 162.2 x 75.1 x 9.1 மிமீ அளவுகளையும் மற்றும் 195 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

Views: - 0

0

0